தில்லையாடி வள்ளியம்மை! செயல்வீரரடி கிளியே!

Published:

thillaiyadi valliammai - 2026

அந்த 16 வயது இளம் பெண் : கிறித்தவ தேவாலயத்தில் தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன் படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று

தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது! அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி யின் முன்னெடுப்பில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன.

அவற்றில் பங்குபெற்று அறவழியில் போராடினார் அந்த 16 வயது இளம் பெண். அதற்காக 1913ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறைக்கொடுமையில் நோய்வாய்பட்டு உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டார்.

வெளியில் வந்த சில நாட்களில் அந்த இளம் பெண் மரண தருவாயில் இருக்கிறார். காந்தியும் அவரது தென்னாப்பிரிக்க தமிழ் நண்பரும் அருகில் நிற்கிறார்கள்.

அந்த இளம் பெண் காந்தியின் நண்பரை பார்த்து அண்ணா நான் மரணிக்க போகிறேன் அந்த பாடலை எனக்காக பாடுங்கள் அதை கேட்டு கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் என வேண்டுகிறார் காந்தியின் நண்பர் அந்த பாடலை பாடுகிறார். ஆம் அந்த பாடல். . .

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

மாணிக்கவாசக பெருமான் இயற்றி சிவபெருமான் எழுதிய திருவாசகத்தின் கடைசி பதிகமான அச்சோ பதிகத்தின் பாடல்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

அந்த இளம் பெண் சிரித்துக்கொண்டே தான் பிறந்த பிப்ரவரி 22அதே நாளில் மரணிக்கிறார்~ காந்தி கேட்கிறார் தன் நண்பரிடம் இது என்ன பாடல் என்று !

நண்பர் திருவாசகத்தை பற்றி விளக்குகிறார். காந்தி உடனே சொல்கிறார் நான் தமிழ் படிக்க வேண்டு மென்று! அதன் பின்பு காந்தி மிழ் படித்து தமிழர்களுக்கு எழுதும் கடிதங்களில் தமிழில் கையொப்பமிட. துவங்குகிறார்! அந்த 16 வயது இளம் பெண் தென்னாப்பிரிக்காவில் 1898ஆம் ஆண்டில் பிறந்த தமிழச்சி !

இவர் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பேர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் அந்த இளம் பெண் 1898 பிப்ரவரி 22ல் பிறந்து 1914 அதே பிப்ரவரி 22ல் இறந்தார்! அந்த இளம் பெண் தில்லையாடி வள்ளியம்மை !

  • கா.குற்றாலநாதன்
ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img