எனவே, “சாதி உணர்வு கொள் தமிழா!”

girl marriage
girl marriage

So called “சாதி மறுப்புத் திருமணங்களில்” எனக்கு முற்றிலும் நம்பிக்கையில்லை. அது ஹிந்து சமுதாயத்தை, அதன் கலாச்சாரத்தை அழிக்க முனைகிறதொரு கிரிமினல் நிகழ்வு என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. In fact அது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்கிறேன்.

சாதிவிட்டு சாதித் திருமணங்கள், மதம் விட்டு பிறமதத்தவனுடன் அல்லது பிறமதத்தவளுடன் செய்யும் பதின்ம வயதுத் திருமணங்களும் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.

இதனைப் படிக்கிற அரைவேக்காடன்கள் என்னைத் தூற்றுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அந்தத் தூற்றுதல்கள் எனது ரோமத்துக்குச் சமானம் எனக் சொல்லிக் கொள்கிறேன்.

“வளர்கிற வயதில், வாழ நினைப்பது” என்பது மிகத் தவறானதொரு முன்னுதாரணம். பத்தாவதோ அல்லது பனிரெண்டாவதோ படிக்கிறதொரு தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு உலகத்தைக் குறித்து என்ன அறிவு இருந்துவிடப் போகிறது? அவள் வாழ்க்கையில் அவள் அறிந்தது மிக, மிகக் குறைவானது. மிஞ்சிப் போனால் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமாக் குப்பைகளைப் பார்த்திருப்பாள். காதல் என்பது என்னவோ மிகப் பெரிய சமாச்சாரம் என்கிற உணர்வு அவளுக்குள் தூண்டிவிடப்பட்டிருக்கும். தன் பின்னால் மோட்டார் சைக்கிளில் சுற்றுகிற குரங்குக் கருவாயனை அவள் ஒரு பலான சினிமா ஹீரோவாக நினைத்துப் புளகாங்கமடைந்திருப்பாள். அதற்குமேல் அவள் அறிந்த உலகம் என்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றிலும் பின்னப்படுகிற வலை மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிற ஒன்று என்கிற அறிவெல்லாம் அவளுக்கு இல்லவே இல்லை.

இதில் குற்றம் சொல்லப்படவேண்டியவர்கள் அந்தப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள்தான். தமிழன் ஒரு சினிமாப் பைத்தியன். சினிமாவில் எல்லாமே போலித்தனம் என்கிற அறிவில்லாதவன். அந்தச் சினிமாவின் கதை போலித்தனமானது. அதில் நடிக்கிற ஹீரோ போலித்தனமானவன். அந்தத் திரைப்படத்தில் நடித்த அனைவருமே காசுக்காக மட்டுமே நடித்த போலிகள். நிஜ வாழ்க்கைக்கும் அந்தச் சினிமாவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிற அறிவில்லாதவன் தமிழன். இன்றுவரை போலிகளின் பேச்சில், நடிப்பில் மயங்கிக் கிடக்கிற கேவலமான நிர்மூடன் தமிழன். உலகில் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற அசட்டு மூடர்களை நீங்கள் பார்க்கவே இயலாது.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் “சாஃப்ட் போர்ன்” வகையைச் சார்ந்தவை. உடலுறவைத் தவிர அத்தனையையும் தமிழ் சினிமாவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூளை வளர்ச்சியடைந்த, அறிவுள்ள மனிதன் பார்க்கவே தகுதியில்லாத சினிமாக்கள் மட்டுமே தமிழ்நாட்டில் எடுக்கப்படுகின்றன. இப்படியாகப்பட்ட சினிமாக்களைத் தமிழன் தன் குடும்பத்துடன் சென்று பார்ப்பான் என்பதுதான் கேவலத்திலும் கேவலம். அவனுடைய சிறு குழந்தைகளும், பதின்ம வயதுக் குழந்தைகளையும் அதுபோன்ற திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்கின்ற கேடுகெட்ட அறிவிலி அவன். அதுபோன்ற சாஃப்ட் போர்ன் திரைப்படங்களை அறியாப் பருவம் கொண்ட தனது குழந்தைகளின் மனதில் என்னவிதமான எண்ணங்களை, மாற்றங்களை உருவாக்கும் என்கிற உணர்வே அவனுக்கு இருப்பதில்லை. உடலுறவே உலகில் பிரதானம் என்கிற எண்ணத்துடன் அந்தக் குழந்தைகள் வளர்கின்றன. அதனால் ஏற்படும் தீங்குகள் பயங்கரமானவை.

Mind you, ஒருவனும், ஒருத்தியும் நன்றாகப் படித்து, ஒரு வேலையில் அமர்ந்து, தங்களின் எதிர்காலத்தை உறுதி செய்து கொண்டபின்னர் அவர்களுக்குள் காதல் வந்து, அதற்குப் பின்னர் சாதி, மதத்தைத் துறந்து கல்யாணம் செய்து வாழ்வதினை நான் முழுவது அங்கீகரிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் உலகத்தை அறிந்தவர்கள். They are matured enough to understand what they are doing. அப்படித் திருமணம் செய்து கொண்டால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் அவர்களிடம் துணிவு இருக்கும். அப்படியே அந்தத் திருமணங்கள் முறிந்தாலும் அந்தப் பெண்ணுக்கு உண்டாகும் பாதிப்பும் மிகக் குறைவானதாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அவள் பெற்ற கல்வி அவளுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கும். தான் எப்படியும் வாழலாம் என்கிற துணிவும் அவளுக்குள் உண்டாகும்.

ஆனால் பதின்ம வயதில் (teen age) திருமணங்கள் அப்படியானவை அல்ல. அந்த வயதில் ஏற்படுவது காதலும் அல்ல. வெறும் உடல் ஈர்ப்பு (infactuation) மட்டும்தான். அது வெறும் உடலுறவுடன் நின்றுவிட்டால் பரவாயில்லை. ஆனால் அவள் அவனுடன் ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்டால் பாதிக்கப்படுவது அவள் மட்டுமல்ல. அவளின் ஒட்டு மொத்த குடும்பமும்தான். ஓடிப்போனவளுக்கு அக்காள்கள், தங்கைகள் இருக்கலாம். அவர்களின் வாழ்வு, எதிர்காலத் திருமணம் இதன் காரணமாக பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஒரு வலைப்பின்னலைப் போல கண்ணுக்கு அறியாமல் கட்டப்பட்டிருக்கும் இந்திய சமுதாயத்தில் பெற்றவனுக்கு “மானம் போவது” என்பது சாதாரண விஷயமில்லை. அதுவே வன்முறையாக வெடிக்கிறது.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

இதுபோன்ற திருமணங்கள் பெரும்பாலும் ஹிந்துப் பெண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகின்றன. அதன் பின்னனியில் இருக்கும் துல்லிய திட்டமிடல்கள், மதக் காரணங்கள், பணம் பறித்தல்கள் போன்றவற்றைக் குறித்த அறிவு இன்றுவரை இந்திய ஹிந்துக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இல்லை.

கும்மிருட்டைப் போலிருக்கும் கறுப்புத் தமிழன் இன்னொரு கறுப்புத் தமிழச்சியை விடவும் வெள்ளைத் தோலுடையவளை எப்படியாவது வலையில் வீழ்த்த முயற்சிப்பது ஒருவித மனோவியாதிதான்.

அதிலும் வெள்ளைத் தோலுடைய “பாப்பாரப் பெண்களை” வீழ்த்துவது ஏறக்குறைய ஜாக்பாட் அடித்தது மாதிரியானதொரு விஷயம். பார்ப்பனப் பெண்களை வீழ்த்தி அவர்களை மதம் மாற்றினால் அவர்களது அஜெண்டாவுக்கு வசதியானது என்கிற வகையில் அடுத்த மதத்துக்காரர்கள் பாப்பாத்திகளைக் குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறான். அதில் விழுந்த பாப்பாத்திகள் அனேகர்.

பார்பனனை அழிக்காதவரை ஹிந்து மதத்தை அழிக்கவே இயலாது என்பது நிச்சயமான ஒன்று. ஏனென்றால் ஹிந்து மதம் பார்ப்பனர்களின் தலைக்குள் இருக்கிறது. உலகெங்கிலும் படையெடுத்த ஆபிரகாமிய மதங்கள் அங்கிருந்த மதங்களை, கலாச்சாரங்களை எளிதாக அழித்தன. காரணம், அந்த மக்களின் புனிதப்புத்தகங்கள் புத்தக வடிவில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. எனவே அந்தப் புத்தகங்களை அழித்ததுடன் அந்தக் கலாச்சாரங்கள் அழிந்து போய்விட்டன.

ஆனால் ஹிந்து மதப் புத்தகங்கள் எவையும் எழுதி வைக்கப்படவில்லை. அப்படியே எழுதப்பட்ட புத்தகங்களை எரித்தாலும் ஹிந்து மதம் அழியவில்லை. காரணம், பிராமணர்கள். அவர்களின் வேதங்கள் வழி, வழியாக ஓதப்பட்டு வந்தவை (Oral tradition). எனவே எவ்வளவு முயன்றாலும் வந்தேறி முஸ்லிம்களாலும், வெள்ளைக்கார மூடர்களாலும் ஹிந்து மதத்தை அழிக்க இயலவில்லை. எல்லாமே பிராமணர்களின் தலைக்குள் இருந்தன. இருக்கின்றன. எனவே பிராமணர்களை அழிக்காதவரை ஹிந்து மதத்தை அழிக்க முடியவே முடியாது என்பது நிதர்சனம். எனவே ஆபிரகாமியக் கிறுக்கர்கள் எல்லா வித்தைகளையும் செய்து பிராமணர்களை அழிக்க முயல்கிறார்கள். பிராமணப் பெண்களை மதம் மாற்றுவது அதில் ஒரு முக்கிய அங்கம்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

துரதிருஷ்டவசமாக பிராமணர்களின் முக்கியத்துவத்தை அறிந்த ஆட்சியாளர்கள் இன்று நம்மிடையே இல்லை. இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை ஆண்ட அனைத்து அரசர்களுக்கும் “ஆவினம் காத்தலும், அந்தணர் ஓம்பலும்” மிக முக்கியமான கடமையாக இருந்தது. ஆவினம் அழிந்தால் நிலவளம் அழியும். பிராமணர் அழிந்தால் ஹிந்துமதம் அழியும்.

எனிவே, நான் சொல்ல வருவது இதுதான். “இயன்றவரை” உங்கள் சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதனால் உண்டாகும் நன்மைகள்தான் அதிகம். நமது முன்னோர்கள் மூடர்களில்லை என்பதினை உணருங்கள்.

சாதி உணர்வு முக்கியம். அதே சமயம் சாதி வெறி, சாதி உயர்வு, தாழ்வு பார்ப்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். எந்தச் சாதியும் உயர்ந்ததில்லை; எந்தச் சாதியும் தாழ்ந்ததில்லை. இந்த வேறுபாடுகளெல்லாம் வெள்ளைகாரனாலும், துலுக்க வந்தேறிகளாலும் உருவாக்கப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னால் இந்தியாவில் சாதிவேற்றுமைகள் இருந்ததாக சரித்திரமில்லை.

எனவே, “சாதி உணர்வுகொள் தமிழா!”

  • பி.எஸ்.நரேந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories