December 7, 2025, 12:43 AM
25.6 C
Chennai

பிள்ளை இல்லாத வீடும்.. ஆண்டாளும்..

திருப்பாவையை பொறுத்தவரை அது பக்தர்கள் மனதில் குறிப்பாக இந்து மதத்தில் ஆழ்ந்த வழிபாடு கொண்ட பெண்கள் மனதில் இரண்டறக்கலந்த விஷயம்..

பனி விழும் மார்கழி, அதிகாலை, பாவைநோன்பு என்று ஆத்மார்த்தமாய் பெண்கள் வழிபாட்டில் திளைத்து ஆண்டாளையும் அவளை ஆட்கொண்ட கண்ணனை யும் ஆராதிப்பதே அலாதியான ரகமாக இருக்கும்.

இப்படி இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் ஆண்டாளை. தேவையில்லாமல் ஏன், எதிர்மறை தரக்கூடிய பொருளில் சித்தரிக்கவேண்டும்? இதுதான் முக்கியமான கேள்வி

அதனால்தான் தானுண்டு தான்வேலையுண்டு என்று இருக்கும் மிதவாத இந்து பக்தர்களும் இம்முறை கோபத்தோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர்.இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்…

மற்ற மதத்தினரின் நம்பிக்கை பெற்ற இலக்கியங்க ளில் இப்படி இறங்கி விமர்ச்சித்து விளையாடமுடியுமா என்று பலரும் வைரமுத்துவை விளாசித்தள்ளுகி றார்கள். அப்படி செய்திருந்தால் இந்நேரம் அவர் தலைக்கு வெளிநாடுகளிலும் விலை வைத்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

கவிஞர் வைரமுத்து தனது பேச்சில் ஆண்டாளை கோர்த்துவிட்ட விதமும், அதன்தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக்கூறிக்கொண்டு திருப்பாவையையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கத்தொடங்கியிருக்கிறார்கள்.

கொங்கை போன்ற வார்த்தைகளை தேடிப்போய் அண்டர் லைன் செய்து அதை ஒரு காம இலக்கியம் என்று சொல்லுமளவிற்கு போகிறார்கள்..

திருப்பாவையின்வியத்தகு சொல்லாடல்கள் பக்தி மற்றும் இலக்கிய நயத்தோடு பார்க்கிறவர்களுக்கு மட்டுமே புரியும்..

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்..
ஓங்கி உலகளந்த உத்தமர் பேர் பாடி..
குறை ஒன்றும் இல்லா கோவித்தா..
ஏழேழு பிறவிக்கும் உன் தன்னோடு… என திருப்பாவையின் சொல்வளம் பக்தியோடு சேரும்போது அவ்வளவு பிரவாகம் காட்டும்..

அதனால்தான் திருப்பாவையின் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து அழகழகாய் திரைப்பட பாடல்களாகவும் கொட்டித்தந்தான் கவியரசு கண்ணதாசன்.. தமிழை ஆண்டாள் என அவ்வளவு உயரத்தில் வைத்த சிலாகித்து பாடினான் அந்த கவிஞன்

பலர் பெண்ணின் அழகை ரசிப்பார்கள்..ஆனால் சிலர் பார்த்தவுடன் ஓடிப்போய் புடவைக்குள் தலையை விட்டுக்கொள்ள மட்டுமே துடிப்பார்கள்…இலக்கியங்களில், கோவில் கோபுரங்களில் காமத்தை மட்டுமே தேடுபவர்கள் இதில் இரண்டாவது ரகம்…

இந்து மதம் பரந்து விரிந்து, பல்வேறு வித்தியாசமான அம்சங்கள் கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு மாய மெல்லிழையால் அது சார்ந்த மக்களை ஒன்றிணைக்கும் அற்புதம் வாய்ந்தது..

ஒற்றை தலைமை வாய்ந்த மதங்களுக்கு எதிராக கம்பு சுத்தும்போது, அங்கே உடனே பதிலடி கிடைக்கும்.. ஸ்பாட்டிலேயே சுளுக்கு எடுத்து அனுப்பிவிடுவார்கள்

ஆனால் ஒற்றை தலைமை இல்லாத, பரந்து விரிந்த இந்து மதத்தையும் நம்பிக்கைகளையும் யார் வேண்டு மானாலும் எளிதில் விமர்சிக்கலாம். பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிவிளையாடலாம் என்ற நினைப்பே இதற்கு முக்கிய காரணம்…

அதேநேரத்தில் பெருந்தன்மைக்கு பேர்போன சாமன்ய இந்துக்கள் முகஞ்சுளித்து புறக்கணிக்கும் செய்லில் இறங்கினால் எதிர்பாளர்களால் கடைசி வரை கரைசேரமுடியாது.. அப்படித்தான் பல டுபாக்கூர் நாத்திகர்களை, இன்றுவரை இறைநம்பிக்கையுள்ள பொதுமக்கள் காமடி பீசாகத்தான் பார்க்கிறார்கள்.

எலி குடித்தெல்லாம் ஏரித்தண்ணி வத்திப்போகாது என்று நக்கலாய் போய்க்கொண்டிருப்பவர்கள் அவர்கள்

(ஷார்ட் வெர்ஷன் இதுதான்.. நம்பிக்கை யிருந்தால் கும்பிடு.. இல்லைன்னா கும்பிடாதே.. யாரும் உன்னை கும்பிட்டே ஆகணும்னு வற்புறுத்தல.. ஆனா கும்பிட்டுகிட்டு இருக்கறவனுக்கு இம்சை குடுக்காதே.. ஒதுங்கிப்போயிடு..முடிஞ்சா ஓடியே போயிடு.. மேட்டர் ஒவர்)

கருத்து: ஏழுமலை வேங்கடேசன், ஊடகவியலாளர்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories