காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 22): விபரீத சோதனைகள்!

Published:

gandhiji manuben - 2026
காந்தியின் அந்தரங்க வாழ்க்கைக்குள் பிரவேசிக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு கிறுக்குப் பிடித்தவரின் கைகளுக்குள் சுதந்திரப் போராட்டம் சிக்கிக் கொண்டது என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

காந்தியின் தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது, படுக்கை அருகில் இருக்காமல், உடலுறவிற்காக தன் மனைவியை பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்கிறார் காந்தி. அந்த நிலையில், தந்தை மரணம் அடைந்து விட்ட செய்தி கதவைத் தட்டி அவருக்கு தெரிவிக்கப்படுகிறது.

தந்தையின் மரணம், அவரிடம் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இனி காம வயப் படக் கூடாது என முடிவு செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பிரம்மச்சரிய விரதம் மேற் கொள்கிறார்.

அவர் கூற்றின்படியே, அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை!  பல நாட்கள், தானாக தன்னிடமிருந்து தன்னிச்சையின்றி விந்து வெளியேறியதாக அவரே குறிப்பிடுகிறார்.

இதைச் சரிசெய்து ‘இந்த்ரிய நிக்ரஹம்‘ செய்ய அவர் மேற்கொண்ட சோதனைகள் தான் கிறுக்குத்தனத்தின் உச்சக்கட்டம்.. இளம் பெண்களுடன் நிர்வாணமாகக் குளிப்பார்.

அப்படி டாக்டர் சுசிலா நய்யாருடன் குளித்ததைப் பற்றி அவரே கூறுகிறார் ;

‘நாங்கள் குளிக்கும் போது நான் கண்களை மூடிக் கொள்வேன்; சுசிலா முழு நிர்வாணமாகக் குளிக்கிறாளா அல்லது உள்ளாடை ( PANTIES ) அணிந்திருக்கிறாளா என எனக்குத் தெரியாது; உடலில் சுசிலா சோப் தேய்ப்பதின் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்கும்’

தன்னை நம்பி தன் சோதனைக்கு உட்பட்ட பெண்ணை எப்படி பகிரங்கமாகக் கேவலப்படுத்துகிறார்..!

இளம் பெண்களோடு நிர்வாணமாக ஒரே போர்வைக்குள் படுத்துறங்குவார். இதில் அவர் சகோதரியின் மகளின் மகளான மனுவும் அடக்கம். அந்த நேரத்தில் ஆண்மை எழுச்சி ஏற்படாது பார்த்துக் கொள்வதுதான் ‘ சோதனையின் நோக்கமாம்‘!

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

ஆண் உறுப்பை லங்கோடு கட்டி மறைக்காது, முழு நிர்வாணமாக நின்று கொண்டு, இளம் பெண்களை நிர்வாணமாக தனக்கு ‘ மசாஜ் ‘ செய்ய அழைப்பார். சில நேரங்களில் முதுகு வலிக்கிறது என்று சொல்லி நிர்வாணமாக படுத்துக் கொண்டு, சுசிலா நய்யாரை நிர்வாணமாக, தன் முதுகின் மேல் படுக்கச் சொல்லி அவரும் படுத்திருக்கிறார்.

காந்தியின் பரிசோதனையின் பதுமைகள் ஆகி விட்டவர்கள் பல நாட்கள் தனிமையில் கண்ணீர் விட்டு அழுவதை காந்தி ஆசிரமவாசிகள் பார்த்திருக்கின்றனர். ஆச்சார்யா வினோபா பாவே, படேல், ஜே.பி.கிருபாளினி, ராஜாஜி உள்ளிட்ட பல தலைவர்கள் அவருடைய கிறுக்குத்தனத்தை பகிரங்கமாகவே கண்டித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்வதை காந்தி ஏற்றவர் இல்லை.

‘எவ்வளவு முயற்சி செய்தும், தன் சோதனையில் முழு வெற்றி கிடைக்க வில்லை. தன்னால் ஆண்மை எழுச்சியை தடுக்க முடியவில்லை’ என்று அந்த மகானுபாவரே வெட்கம் விட்டு பதிவு செய்திருக்கிறார்.

காந்தி தனக்கிருந்த செல்வாக்கை (CELIBRITY STATUS) துஷ்பிரயோகம் செய்தார் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஆணாதிக்க திமிரின் மொத்த உருவமாகக் காந்தி இருந்தார் என்று கூறினால் மிகையாகாது. ஜனவரி 1 1947ல் அவருடைய செயலாளராக இருந்த ஆர்.பி.பரசுராம், காந்திக்கு எழுதிய 16 பக்க கடிதம் GOOGLE SEARCH செய்தால் கிடைக்கும்.

அதில் அவர் காந்தி மீது பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறார். ‘நான் அப்படித்தான் நடந்து கொள்வேன். என் கொள்கையில் உடன்பாடில்லாதவர்கள் என்னை விட்டு விலகலாம், ஆசிரமத்தை விட்டு வெளியேறலாம் ’ என்று பதில் எழுதியிருக்கிறார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

ஆசாரக் கோவையில் யார் யாருடன் தனித்திருக்கக்கூடாது என்று ஒரு பாடல் கூறுகிறது.

‘ ஈன்றாள் மகள் தம் உடன் பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான் ‘

அதாவது தாயுடனாயினும், மகளுடனாயினும் தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறங்க மாட்டார்கள், ஏனென்றால் ஐம்புலன்களையும் தடுப்பது அரிது!

இவர்களுக்கே தர்ம நெறிகள் தடை விதிக்கின்றன என்றால், இரத்த சம்பந்த மில்லாதவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?!

REVEALED; THE BEAUTY WHO BEWITCHED by Mian Ridge என்பவர் எழுதிய புத்தகத்தில் காணப்படும் விஷயங்கள் ..

காந்திக்கு 50 வயது இருக்கும்… அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள். சரளாதேவி செளத்திரி எனும் பெண்மணியிடம் காதல் வயப்பட்டு அவளை திருமணம் செய்ய முற்படுகிறார்.

காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதிய காந்தியை பற்றிய சரித்திரத்தில் கூட இது இடம் பெற்றிருக்கிறது.

சரளாதேவி, ரபிந்திரநாத் தாகூரின் சகோதரி மகள். 1901ல் காங்கிரஸுக்காக எழுதப்பட்ட பாடலுக்கு இசையமைக்கப்பட அந்த குழுவை வழி நடத்தியவர் சரளாதேவி. அப்போதுதான் காந்தி முதன் முதலில் சரளாதேவியை சந்தித்தார்.

ராம்பூஜ் தத் செளத்திரி எனும் பத்திரிகை ஆசிரியரின் மனைவி. பின்னாளில் அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் போது காந்திக்கு சரளாதேவி மீது காதல் ஏற்படுகிறது. அப்போது சரளாதேவிக்கு வயது 47.

ராம்பூஜ் தத் செளத்திரி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு அடிக்கடி சிறை செல்பவர். தன் மனைவி கஸ்தூரிபாயிடம் கிடைக்காத ‘அறிவார்ந்த தோழமை‘ சரளாதேவியிடம் கிடைத்ததாக காந்தி குறிப்பிடுகிறார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சரளாதேவியை காந்தி திருமணம் செய்ய விரும்பினார், ஆனால் அப்படியொரு திருமணம் நடந்தால் அது காந்தி மீது மக்களுக்கு ஒரு மரியாதைக் குறைவை ஏற்படுத்தும். அது சுதந்திர போராட்ட இயக்கத்தை பாதிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் காந்திக்கு அறிவுரை கூறி அவர் மனதை மாற்றினர்.

அதன் பிறகு சரளாதேவிக்கு கடிதங்கள் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார். சாதாரண மனிதர்களுக்கு இருந்த காதல், திருமணம் போன்ற ஆசா பாசங்களில் அலைக்கழிந்தவர் மகாத்மாவானது எப்படியோ?!

ஒரு பக்கம் முஸ்லீம்களின் ஆப்த நண்பராக வலம் வந்தார்.. மறு புறம் ஹிந்துக்களின் நலனுக்கு எதிராக அனைத்து காரியங்களையும் செய்தார்..!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குத்தனமான, வக்கிரத்தனமான நிர்வாண சோதனைகளில் ஈடுபட்டார்.

வங்காளத்தில் ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது.. கல்கத்தாவில் தான் தங்கியிருந்த போது தன் சகோதரியின் மகளின் மகளான மனுவுடன் ‘செக்ஸ் சோதனையில்’ ஈடுபட்டார் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்த காந்தியைத்தான் கொல்வதென்று கோட்ஸேயும், ஆப்தேயும் முடிவு செய்தனர். அதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபடவும் தொடங்கினர்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Related articles

Recent articles

spot_img