காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 23): சிந்தனையால் ஒன்றானவர்கள்!

godse apte - 2026

நாதுராம் கோட்ஸே ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ எனும் மராத்தி மொழி தினசரியின் ஆசிரியராக இருந்தார். அந்த தினசரி பத்திரிகையின் மேலாளராக நாராயண் ஆப்தே இருந்தார்.

காந்தியை கொல்ல வேண்டும் எனும் எண்ணத்தை இருவரில் முதலில் வெளிப் படுத்தியது யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் வழக்கு விசாரணையின் போது, தான் தான், தான் மட்டும் தான் காந்தியை கொன்றதற்கு பொறுப்பு எனும் நிலைப் பாட்டை கோட்ஸே எடுத்திருந்தார்.

இந்த நிலைப்பாடு கடைசி வரை நீடித்தது. ஒரு வேளை, இருவர் மனதிலும், ஒரே நேரத்தில் இந்த எண்ணம் உருவாகியதோ என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் பல நேரங்களில், பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியாக யோசிக்கக் கூடியவர்கள்.

காந்தி கொலை நடந்த ஒரு வருடம் கழித்து, தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஆப்தே, கோட்ஸேயின் சகோதரரான கோபால் கோட்ஸேயிடம் கூறினார்: ’’ நானும் நாதுராமும் ஒன்றாக பணியாற்றிய நான்கரை வருட காலத்தில், ஓரே நேரத்தில், ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்திருக்கிறோம்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

நாதுராம் ஏதாவது இடத்திற்கு சென்றிருப்பார்; அங்கிருந்து ஒரு விஷயத்தைக் குறித்துக் கட்டுரை அனுப்புவார். பார்த்தால், அதே விஷயத்தைக் குறித்து, அதே கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை நான் எழுதி முடித்திருப்பேன்.

அதே போன்று, எங்கள் நோக்கத்தின் மீதிருந்த பக்தியிலும், இரு உடல்களில் ஒரே மனம் கொண்டவர்களாக இருந்தோம் ‘’

‘அந்த நோக்கம் ‘ ஹிந்து சங்கடன் அதாவது ‘ ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது‘

ஹிந்துக்களுக்கு புத்துணர்வூட்டி, அவர்களை ஒன்று படுத்தி, கடந்த காலங்களில் முஸ்லீம்களிடம் அடி பணிந்தது போல் இல்லாது, தங்கள் அரசியல் உரிமைகளுக்காக எழுந்து நின்று போராடும் விதமாக அவர்களை தயார் செய்வது.

இந்த ஒற்றுமை இயக்கத்தின் உச்சக்கட்ட இலக்கு, பாரதம் துண்டாடப்படாது இருப்பதை உறுதி செய்து, புனிதமான அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை பேணிக் காப்பது..

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories