பஸ்ஸின் மேல் ஏறி மாணவர்கள் அட்டகாசம்! பயணிகள் அவதி!

பொது தகவல்கள்
student 4 - 2026

சென்னையில் ஓடும் மாநகர பேருந்து கூரை மீது ஏறி நடனமாடிய இரண்டு புதுக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மந்தைவெளியில் இருந்து (தடம் எண்.21) மாநகர பேருந்து பிராட்வே நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ராயப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், புதுக்கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பஸ்சில் ஏறினார்.

பேருந்து புறப்பட்டு, சென்று கொண்டிருந்தபோது, திடீரென 2 மாணவர்கள் மட்டும் பேருந்தின் ஜன்னலில் தொங்கியபடியும், பக்கவாட்டில் தாளம் போட்டபடி, பாட்டு பாடிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

student 3 - 2026

பேருந்தை பின்தொடர்ந்து வந்த அக்கல்லூரி சக மாணவர்கள் சிலர், பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

பேருந்து அண்ணாசாலை வந்த உடன் இரண்டு மாணவர்களும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி நடனமாடினர். இதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து திருவல்லிக்கேணி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி திருவல்லிக்கேணி காவல்துறையினர் அண்ணாசாலையில் உள்ள சிம்சன் பேருந்து நிலையத்தில் மாணவர்களை பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், காவல்துறையினரைப் பார்த்த இரண்டு மாணவர்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

ஆனால் காவல்துறையினர் விடாமல் பொதுமக்கள் உதவியுடன் சுற்றி வளைத்து 2 மாணவர்களையும் மடக்கி படித்தனர்.

bus day - 2026

பின்னர் இரண்டு மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து கடுமையாக எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். சென்னையில் பேருந்து மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதும், அடிக்கடை மாணவர்கள் மோதிக்கொள்வதும் வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.