வன்முறைத் தலைவி..! வசமாகச் சிக்கி…! எஃப்.ஐ.ஆர்., பதிவு!

Published:

delhi jnu 1 - 2026

புதுதில்லி: ஜே.என்.யூ., மாணவர் சங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை நடப்பதற்கு முன்னதாகவே இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலை., வளாகத்தில் கடந்த ஜன., 5ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவில் முகமூடி அணிந்து தடிகளுடன் சிலர் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் உள்ளிட்ட சிலர் காயமுற்றனர். இதனை அடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதில், இடதுசாரி மாணவர் சங்கங்களும், அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் மாணவ சங்க தலைவி ஆஷிஜோஷ் உள்ளிட்ட சிலர் கடந்த 4 ஆம் தேதி, அதாவது வன்முறை நடக்கும் முந்தைய நாள் பல்கலை., வளாகத்தில் உள்ள சர்வர் அறையை அடித்து சூறையாடியதுடன், காவலர்களையும் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

aishe ghose - 2026

ஜே.என்.யு வளாகத்தில் உள்ள சர்வர் அறையை சூறையாடியதற்காக ஜே.என்.யு. மாணவர் மன்ற தலைவர் ஆயிஷ் கோஷ் மற்றும் 19 பேருக்கு எதிராக தில்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சியில் ரத்தத்தில் நனைந்த முகத்துடனும், திங்களன்று ஒரு கட்டுடனும் தோன்றிய கோஷ், ஞாயிற்றுக்கிழமை ஜே.என்.யுவில் நடந்த வன்முறையில் முக்கிய பங்கு வகித்ததாக தற்போது அடையாளம் காணப் பட்டுள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

அவர் மீது ஐபிசியின் 341, 323 மற்றும் 506 பிரிவுகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தவிர, சாகேத் மூன், சதீஷ் யாதவ், சரிகா சவுத்ரி உள்ளிட்டோர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை தலைநகரை உலுக்கிய ஜே.என்.யூ வன்முறையில் போலீசார் நான்கு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்தனர். அடுத்த செமஸ்டர் பதிவு நடைமுறைகளைத் தடுத்த வகையில், ஜே.என்.யூ நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 4 ஆம் தேதி மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செமஸ்டர் சேர்க்கைப் பதிவுக்கு முயன்ற மாணவர்களை சில மாணவர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது! அடுத்த செமஸ்டர் சேர்க்கைக்கு மாணவர்கள் பதிவு செய்வதைத் தடுத்த வகையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது எஃப்.ஐ.ஆர் கள் பதிவு செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜே.என்.யூ வன்முறையில் அடையாளம் காணப்படாத நபர்களுக்கு எதிராக, தீ வைத்ததற்காக நான்காவது எஃப்.ஐ.ஆர் ஜனவரி 6 அன்று பதிவு செய்யப்பட்டது.

Aishe Ghosh - 2026

இந்த வன்முறை சம்பவத்தை அறிந்த போலீசார் நான்காவது எஃப்.ஐ.ஆரை தேசிய தலைநகரின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.

நான்காவது எஃப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் யாதவ் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கட்டணம் உயர்வு மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்! தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நிர்வாகத் தொகுப்பு அறைகளுக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவொரு மாணவரையும் எதிர்ப்பு தெரிவிக்க அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது! எனவே அங்கு போலீஸார் நிரந்தரமாக நிறுத்தப்பட்டனர். ”

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

மாலை 3.34க்கு சில மாணவர்கள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர் .பெரியார் விடுதிக்கு வெளியே பொது சொத்துக்களை சேதப்படுத்துகிறார்கள் என்பதை போலீஸார் அறிந்தார்கள்.

“நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம், அடையாளம் தெரியாத 40 முதல் 50 பேர், அவர்களில் சிலர் கைக்குட்டை மற்றும் முகமூடிகளால் முகங்களை மூடிக்கொண்டு, குச்சிகள் மற்றும் தடிகளை ஏந்தியிருந்தனர். அவர்கள், விடுதிக்கு உள்ளேயும் வெளியேயும் மற்ற மாணவர்களை அடிப்பதைக் கண்டோம்” என்று யாதவ் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்தார்.

அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்துவதாகவும், மாணவர்களை அடிப்பதாகவும் போலீசாரிடம் கூறினர். போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமைதியைக் காக்கச் சொன்னார்கள் என்று யாதவ் எஃப் ஐ ஆரில் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் அந்தப் பகுதியை அடைந்தவுடன், இந்த அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்” என்று யாதவ் தெரிவித்துள்ளார்.

வளாகத்திற்குள் நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைய காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளித்தது.

ஜே.என்.யூ அதிகாரிகளிடமிருந்து கோரிக்கைக் கடிதத்தைப் பெற்ற பிறகு, வளாகத்திற்குள் வன்முறை நிலைமையை சீராக்க மேலும் போலீஸார் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. “நாங்கள் மாணவர்களை அமைதியைக் காக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம்,” என்று அவர் கூறினார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வளாகத்தில் இருந்து மாணவர்களிடமிருந்து துயர அழைப்புகள் வரத் தொடங்கின.

“இரவு 7 மணியளவில், அடையாளம் தெரியாத 40 முதல் 50 பேர் சபர்மதி விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை அடித்து சொத்துக்களை சேதப்படுத்தத் தொடங்கினர் என்பதை நாங்கள் அறிந்தோம்” என்று எஃப்.ஐ.ஆர்.இல் குறிப்பிடப் பட்டுள்ளது.

காவலர் குழுக்கள் உடனடியாக அந்த இடத்தை அடைந்து, சுமார் 40 முதல் 40 மாணவர்கள் கொண்ட கும்பல், ஹாஸ்டலின் சொத்துக்களை சேதப்படுத்துவதைக் கண்டறிந்தனர். “நாங்கள் அமைதியைப் பேணுவதற்கும், வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கும் அறிவிப்பு செய்தோம். குண்டர்கள் தொடர்ந்து சொத்துக்களை சேதப்படுத்தினர், ஆனால் நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், ”என்று யாதவ் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு காயமடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு எய்ம்ஸ் மையம், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எஃப்.ஐ.ஆர்.இல் குறிப்பிடப் பட்டுள்ளது.

“கட்டுப்பாடற்ற கும்பல் சொத்துக்களை சேதப்படுத்தியது, பின்னர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியது” என்று எஃப்.ஐ.ஆர். கூறுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img