சுரேஷ் என்ற நபர், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் செல்வ விநாயகர் கோயில் பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், 5 வயதான வர்ஷன் என்ற மகனும் உள்ளார். இவர்களின் வீட்டில் வைக்கபட்டிருந்த சத்து மாத்திரையை பார்த்த வர்ஷன், மாத்திரையை மிட்டாய் என்று நினைத்துள்ளான்.
இதனால், யாரும் கவனிக்காத நேரத்தில் அதிக அளவு மாத்திரையை எடுத்து சாப்பிட்டுள்ளான். மாத்திரைகளை சாப்பிட்ட சில நிமிடத்தில், சிறுவன் அதே இடத்தில் மயக்கமடைந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர், சிறுவனை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர் கண்காணிப்பில் மேல் சிகிச்சைக்காக, சென்னை எக்மோரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிறுவனுக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காததால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாத்திரைகளை குழந்தைகள் கை படும் தூரத்தில் வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல் குழந்தைகளை பெற்றோர்கள் அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.