மீண்டும் சுனாமி?

Published:

இந்தியப் பெருங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஏற்படப்போவதாக, பூமி, விண்வெளி மற்றும் விழிப்புணர்வு ஆய்வுகளை (ESP: Earth, Space, Awareness Studies) மேற்கொள்ளும் கேரளாவின் BK ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பாபு கலயில் கூறியிருப்பது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. பலத்த காற்று வீசும் என்றும், சுனாமி அலைகள் தாக்கக் கூடும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

இதனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பாபு கலயில் குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல் நடக்குமா? இதை நம்பலாமா? வேண்டாமா? என்பதில் பயம் கலந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

நம்பலாமா?

பாபு கலயிலின் உள்ளுணர்வின் அடிப்படையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமானது அல்ல.! அதாவது, ஜோசியம் பார்ப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இவர் முதல்வராகிவிடுவார்… இவர் பிரதமராகிவிடுவார்… என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் கூறுவோம் அல்லவா? அதுபோல்தான், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறியிருப்பதும்! எனவே இதை மேற்கொண்டு நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.

பின்குறிப்பு:

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

2004-ல் சுனாமி தாக்கக் கூடும் என்று, அந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு ESP என்ற உள்ளுணர்வின் மூலம் பாபு கலயில் எச்சரித்திருந்தார்.

Related articles

Recent articles

spot_img