பொதிகை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்..

Published:

tambaram kollam spl train2343 1522393916 - 2026

மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக பொதிகை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் வரும் பிப்23முதல் மார்ச் 3வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக‌தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.பயணிகளள் இதற்கேற்ப முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

ரயில் எண். 12661/12662, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை -சென்னை-செங்கோட்டை 23.02.2023 முதல் 03.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. எலக்ட்ரிக்/டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும்.

ரயில் எண். 16101/16102, சென்னை எழும்பூர் – கொல்லம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 28.02.2023 முதல் 02.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img