செந்தில் பாலாஜிக்கு திமுக.,வில் கரூர் மாவட்டப் பொறுப்பு! எந்த ‘ஸ்லீப்பர்செல்’?!

Published:

senthil balaji - 2026

ஓடியாங்க ரஷோமான், விருமாண்டி டைப் படம் பாக்கலாம்! அதிமுக.,விலிருந்து திமுகவுக்கு போய்சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது

வெர்ஷன் ஒன் கோஷ்டி..

ஐயகோ திமுகவில் உட்கட்சி தேர்தல் ஜனநாயகம் அடியோடு செத்துவிட்டதா? வெளியே இருந்து வருகிற வனெல்லாம் உடனடியாக பதவி வழங்கினால் திமுக நிர்வாகிகள் நொந்துபோகமாட்டார்களா?

பழைய திமுககாரன் கடைசிவரை அப்படியே சாக வேண்டியது தானா? நேற்றுவரை பரம எதிரியாக நினைத்து அரசியல் செய்த ஒருவரின் கீழ் அடிபணிந்து கட்சி வேலைபார்க்கவேண்டும் என்றால் தொண்டனின் மனநிலை எந்த அளவுக்கு கொதிக்கும்.?

கேகேஎஸ்எஸ்ஆர், ஜெகத்ரட்சகன், எவ.வேலு போன்ற முன்னாள் அதிமுக பெருந்தலை பட்டியல் பெருகிக் கொண்டே போனால் திமுகவே முன்னாள் அதிமுக வினரின் பிடிக்குள் முழுவதுமாக போய்விடுமே.

வெர்ஷன் 2 கோஷ்டி

ஏற்கனவே எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் நிலைமை, நேற்றுவரை திமுகவை கடுமையாக கழுவி ஊற்றி அரசியல் செய்த ஒருவரையே, அரவணைத்து பதவி கொடுத்து குளிப்பாட்டும் அளவுக்கா பரிதாபமாய் போகவேண்டும்?

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

எ.வ.வேலு ஜெகத் போன்ற முன்னாள் அதிமுக பெருந் தலையிடம் வசமாக சிக்கியிருக்கும் ஸ்டாலின், இப்போது மேலும் ஒரு தலையிடம் பிடியை கொடுத்து மாடடிக்கொண்டிருக்கிறார்.

வெர்ஷன் 3 கோஷ்டி

பொறுப்பாளராதானே போட்டிருக்காங்க, பொருப்பா ளரை நியமிக்கதானே முடியும்..மாவட்ட செயலாள ரைத்தானே எலக்சன் வெச்சி எலக்ட் பண்ணமுடியும்? இதுல எங்க உட்கட்சி ஜனநாயகம் போச்சு கூவறீங்க?

அதெல்லாம் போவுட்டும்..எங்க கட்சியல இன்னா நடந்தா உனக்கு இன்னா நோவுது? போஸ்ட்டிங்ல இருந்து கழட்டிஉட்ட மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனே கூலா நடந்துபோறாரு.. நீ ஏன் ஓவரா கூவறே..?

கட்சி தலைமை இன்னா செய்யுதோ அதுக்கு கட்டுப் பட்டு நடக்கிறவன்தான் விசுவாசமான தொண்டன். செந்தில்பாலாஜி இன்னா, நாளைக்கு டிடிவி தினக ரனே கட்சிக்கு வந்து சேர்ந்து ஸ்டாலின் பதவி குடுத்தாலும், நாங்க தலைமை சொல்லுக்கு கட்டுப் பட்டே நடப்போம். யோசிக்கற புத்தியே எங்களுக்கு கிடையாது. நாங்க என் யோசிக்கணும். அதுக்குதான் தலைமைன்னு ஒன்னு இருக்கே..அது யோசிக்கப்போவுது

ஏன்னா திமுகவுல மட்டுந்தான் இப்படியான கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டையும் விசுவாசத்தையும் பாக்கமுடியும். எலக்சன் டயத்துல கட்சி நல்லதுக்காக எப்டியெல்லாம் வியூகம் அமைக்கணும்னு எங்க தலைமையிடம் தெரியும். நீ மூடிக்கிட்டு கௌம்பு..

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

நம்ம வெர்ஷன்

நாங்கள்தான் ஸ்லீப்பர் செல்லாய் அவரை திமுகவுக்குள் அனுப்பினோம்…மக்கள் செல்வர்

அவரு உங்ககிட்ட வந்து சேர்ந்ததே நாங்க அனுப்பி வெச்ச ஸ்லீப்பர் செல்லாகத்தான் போதுமா- எம்கேஎஸ்

கருத்து: ஏழுமலை வெங்கடேசன் (ஊடகவியலாளர்)

Related articles

Recent articles

spot_img