ஆரோக்கிய சமையல்: ஓட்ஸ் சம்பா ரவை இட்லி!

Published:

otes - 2026

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி

தேவையானவை:

ஓட்ஸ் – ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை – அரை கப்,

தயிர் – ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு,

இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்),

கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

samba rava - 2026

செய்முறை:

முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

sambha rava idly - 2026

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 10, 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, இந்தக் கலவையை இட்லிகளாக செய்து பரிமாறவும்

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img