பசியைத் தூண்டும் சுண்டைக்காய் வற்றல் குழம்பு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
aundaikar - 2026

சுண்டைக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல் – கால் கப்,

தனியா – 2 டீஸ்பூன்,

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 6,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – அரை டீஸ்பூன்,

புளி – 50 கிராம்,

மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,

பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

kuzhampu sundai - 2026

செய்முறை:

புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து… அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். பிறகு, அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.