சதுர்த்தி ஸ்பெஷல்: பஞ்ச ரத்ன கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0816_185552

பஞ்சரத்ன கொழுக்கட்டை

தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி , கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, கடுகு. – அரை டீஸ்பூன், பெருங்காயம். – ஒரு சிட்டிகை, எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி விட்டு, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.