கனவின் விளைவு: முறையில் ரகசிய ஆசையை குறிக்கும் கனவு…!

Published:

dream-1

பறவைகள் குறித்து கனவு காண்பது பொதுவாக நல்ல அறிகுறி என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். தொடர்ந்து பறவை குஞ்சுகள், பெரிய பறவைகள், அன்னப்பறவைகள் போன்றவை உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்.

உங்கள் கனவில் கவர்ச்சியான பறவைகளை நீங்கள் பார்த்தால் அத்தகைய கனவு விரைவில் நீங்கள் தொலைதூர பயணத்திற்கு செல்வதைக் குறிக்கும்.

பறவைகளின் படங்களை நீங்கள் எடுப்பது பற்றி கனவு கண்டால், அத்தகைய கனவு ஒரு நல்ல அறிகுறியாகும். இது ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது

பறவைகள் மலம்கழிப்பது போன்று உங்கள் கனவில் வந்தால் அத்தகைய கனவு நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. குறிப்பாக இது உங்கள் தலைமுடியில் போட்டால் நல்ல அதிஷ்டம்.

உங்கள் கனவில் ஒரு பெரிய பறவையை நீங்கள் பார்த்தால், அத்தகைய கனவு உங்கள் வாழ்க்கையில் உள்ள ஏதேனும் கடினமாக சூழ்நிலையை குறித்து நீங்கள் வருத்தப்படுவதை குறிக்கிறது. மேலும் தீங்கான சம்பவங்கள் நடப்பதற்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

உங்கள் கனவில் பறவை குஞ்சுகளை பார்த்தால் அத்தகைய கனவு புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.

நீங்கள் உங்கள் கனவில் ஒரு பறவையைப் பிடித்தால், அத்தகைய கனவு செழிப்புக்கான அறிகுறியாகும்.

ஒரு பறவையை கொல்வது பற்றி நீங்கள் கனவு கண்டால், அத்தகைய கனவு நெருங்கிய ஒருவருடன் வரவிருக்கும் பிரச்சினைகளைக் குறிக்கலாம்.

உங்கள் கனவில் பறவைகள் ரொட்டி துண்டுகளை சாப்பிடுவதை போன்று பார்த்தால், அத்தகைய கனவு நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும்

நீர் பறவைகள் அல்லது தண்ணீருக்கு அருகில் பறவைகள் இருப்பது போன்று உங்கள் கனவில் வந்தால் அத்தகைய கனவு நிலையான உணர்ச்சிகளின் அறிகுறியாகும்.

உங்கள் கனவில் வெள்ளை பறவைகள் வந்தால் அது உங்கள் சுதந்திரம் மற்றும் வாழ்க்கையில் அமைதிக்கான அடையாளமாகும்.

உங்கள் கனவில் கருப்பு பறவைகள் வந்தால் அது கெட்ட செய்தியைக் குறிக்கலாம் அல்லது ஏதாவது விஷயத்தை குறித்து நீங்கள் கவலைப்படுவதைக் குறிக்கலாம்.

உங்கள் வீட்டிற்குள் பறவைகள் பறப்பதை பற்றி நீங்கள் கண்டால், இந்த கனவு உங்கள் நண்பர்கள் நிமித்தம் நீங்கள் சில இழப்புகளை சந்திப்பீர்கள் என்பதைக் குறிக்கும்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

ஒரு பறவை கூண்டில் பறவைகள் இருப்பது போன்று பார்த்தால் அத்தகைய கனவு மகிழ்ச்சியான வீட்டு வாழ்க்கை அமைய போவதை குறிக்கும்.

நீங்கள் உங்கள் ஒரு கனவில் ஒரு பறவையை சாப்பிடுவது போன்று பார்த்தால் இந்த கனவு உங்களுக்கு சில ரகசிய ஆசைகள் இருப்பதைக் குறிக்கும் .

Related articles

Recent articles

spot_img