February 23, 2026, 10:52 AM
26 C
Chennai

வயிற்றில் புழு: அறிகுறியும், ஆரோக்கியமும்..!

Worm in the stomach
Worm in the stomach

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

அடிவயிற்று வலி
ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அடிவயிற்று வலி அதிகமானால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மலப்புழை அரிப்பு
இது அனைவருக்கும் தெரிந்த ஓர் அறிகுறி தான். அது மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுவது. குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும் போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறுநாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

சோர்வு மற்றும் பலவீனம்
வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.

பசியின்மையுடன் எடை குறைவு
பசியின்மை அதிகரிப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம். அதிலும் அதிகமான அளவில் புழுக்கள் உடலில் பெருகியுள்ளது என்று அர்த்தம். எனவே இங்மமாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

மன இறுக்கம்

உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும். அதோடு செரிமான பிரச்சனையும் இருந்தால், இருமடங்கு மன வேதனையை சந்திக்கக்கூடும். ஆகவே திடீரென்று எக்காரணமும் இல்லாமல் மன இறுக்கமாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு காரணம் வயிற்றுப் புழுக்கள் தான்.

பற்களை கொறிப்பது
புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை கொறிப்போம். ஏனெனில் உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் அதிகரிக்கும். அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களைக் கொறிக்கின்றனர்.

இரத்த சோகை
உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றை உறிஞ்சி, இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை வந்தால், முதலில் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் மருந்துகளை உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்துங்கள்.

சரும பிரச்சனைகள்
உடலினுள் ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின், சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த புழுக்கள் வெளியேற்றும் கழிவுகளால், இரத்தத்தில் ஈயோசினோபில்கள் அதிகரித்து, இதனால் புண்கள், உறுப்புக் கோளாறு, மூட்டு வீக்கம் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படும். ஆகவே உங்களுக்கு எவ்வித காரணமும் தெரியாமல் திடீரென்று சரும பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

தசைகள் மற்றும் மூட்டுக்களில் வலி
ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணிகள், மூட்டு மற்றும் தசைகளின் மென்மையான திசுக்களை சிதைவுறச் செய்து, எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். பலரும் மூட்டுக்களில் வலி ஏற்படும் போது ஆர்த்ரிடிஸ் ஆக இருக்கக்கூடும் என தவறாக நினைக்கின்றனர். உடலில் புழுக்கள் அதிகம் இருந்தாலும், இம்மாதிரியான வலியை மூட்டுக்களில் சந்திக்க நேரிடும்.

நம் வயிற்றில் வளரும் இந்த புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் குடலில் வாழும் புழுக்களை அழிப்பதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

தேங்காய் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் வலிமையான ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இவை குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றிவிடும். எனவே தினமும் காலை உணவின் போது 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள்.

பூண்டு
பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உள்ளன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் அழிக்க உதவும். மேலும் பூண்டில் சல்பர் அதிக அளவில் உள்ளது. பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்க உதவும்.

குடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால், மலப்புழையில் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும். அந்நேரத்தில் பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையைச் சுற்றி தடவுங்கள். இதனால் மலப்புழையில் உள்ள புழுக்களின் முட்டையை அழித்து, அரிப்பைக் குறைக்கும். மேலும் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம்.

பப்பாளி
ஆயுர்வேதத்தில் குடல் புழுக்களை அழிக்க பப்பாளி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் முக்கியமான நொதிப் பொருள் தான் காரணம். ஆகவே பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் உள்ள குகுர்பிடாசின், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகளை முடக்கி, உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றும். முக்கியமாக பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். அதற்கு பூசணி விதைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொள்ளலாம். சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

ஓமம்
ஓமம் கூட குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். ஆயுர்வேதத்தில் வயிற்றுப் புழுக்களை அழிக்க, ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

மாதுளை மரப் பட்டை
மாதுளை மரப்பட்டையை நாம் இதுவரை பயன்படுத்தி இருக்கமாட்டோம். இருப்பினும் மாதுளையின் மரப்பட்டை, இலைகள் மற்றும் தண்டு போன்றவை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது. மாதுளையின் மரப்பட்டையில் புனிசின் என்னும் அல்கலாய்டு ஏராளமான அளவில் உள்ளது. இது வயிற்றில் வளரும் நாடாப்புழுக்களை அழித்து வெளியேற்றக் கூடியது. அதற்கு மாதுளை மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடிக்க, குடல் புழுக்கள் அழிந்து வெளியேறும்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது வயிற்றில் வளரும் புழுக்களை அழிப்பதோடு, உடலில் உள்ள இதர கிருமிகளையும் அழித்து, உடலில் இருந்து வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

கேரட்
கேரட்டுகளில் உள்ள பீட்டா-கரோட்டின், உடலில் இருந்து புழுக்களை வெளியேற்றும். இதில் உள்ள வைட்டமின் ஏ, புழு முட்டைகளை கரையச் செய்துவிடும். மேலும் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

கிராம்பு
கிராம்பில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் புழுக்களை அழிக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள புழு முட்டைகளை அழிக்க உதவுவதோடு, உடலில் இருந்து அந்த புழுக்களையும் வெளியேற்றும். ஆகவே உங்கள் உணவுகளில் கிராம்பு பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், ஒரு கிராம்பை தினமும் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள்.

மஞ்சள்
மஞ்சள் குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவும் அற்புத பொருளாகும். மஞ்சளில் ஆன்டி-செப்டிக், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். மேலும் மஞ்சள் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவும் மற்றும் குடல் புழுக்களுக்கான அறிகுறிகளையும் நீக்க உதவியாக இருக்கும்.

வால்நட்ஸ் தோல்
கருப்பு நிற வால்நட்ஸ் தோலை அரைத்து சாறு எடுத்து, குடிப்பதன் மூலம், வயிற்றில் உள்ள அதிகப்படியான குடல் புழுக்களில் இருந்து விடுபடலாம். ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் இந்த ஜூஸ் படர்தாமரையைப் போக்க பயன்படுத்தப்படும்.

கிரேப்ஃபுரூட் விதை சாறு
இது சுகாதார உணவு கடைகளில் ஜூஸ் வடிவில் விற்கப்படும் அற்புதமான குடல் புழுக்களை அழிக்க உதவும் பொருள். இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், குடல் புழுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

நீர் பூசணி/வெள்ளை பூசணி
வெள்ளைப் பூசணிக் காயின் விதைகளை நீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை தேங்காய் பாலில் கலந்து குடித்து வந்தால், புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் இருந்து வெளியேற்றப்படும். குறிப்பாக இது நாடாப்புழுக்களை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

மூங்கில் இலை
மூங்கில் இலைகள் குடல் புழுக்களை அழிக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்து, தினமும் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் குடல் புழுக்கள் அழிந்து வெளியேறுவதோடு, இனிமேல் குடல் புழுக்கள் வராமலும் இருக்கும்.

கற்றாழை
கற்றாழை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடித்து வர வேண்டும். குறிப்பாக இந்த நீரை குழந்களுக்கு குடிக்கக் கொடுப்பது நல்லது. இதனால் அவர்கள் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து, உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories