அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! சிறுநீருடன் இரத்தம்.. சுக்கில நஷ்டம்..!

Published:

health tips 1
health tips 1

சிறுநீர்த் தாரையில் எரிச்சலா?

சிறுநீர்த் தாரையில் எரிச்சலோ வலியோ ரணமோ உண்டாகியிருந்தால் நித்திய கல்யாணிப்பூ, நெருஞ்சில் சமூலம் இரண்டும் சம எடை எடுத்து கஷாயம் வைத்து சர்க்கரையும் பாலும் சேர்த்து காலையில் மட்டும் இருபது தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட்டு வர குணமாகும்.

சிறுநீரோடு இரத்தமா?

அதிக உஷ்ணத்தால் இது போவ் ஏற்படும். கீழா நெல்விச் செடியை வேருடன் கொண்டு வந்து அவம்பி இடித்து, சாறு எடுத்து, அப்போது கறந்த மூன்று அவுள்ஸ் பசும்பாலில் ஓர் அவுன்ஸ் சாறு விட்டுக் கலந்து உள்ளுக்குக் கொடுக்க நாலைந்து நாள்களில் குணமாகி விடும்.

மேக உஷ்ணத்தால் சிறுநீருடன் இரத்தம் போனால் ஆரைக் கீரையை உலர்த்தி எடுத்துக் கஷாயம் வைத்து வடிகட்டி, பசும் பாலும். பளங்கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட இரத்தம் போவது உடனே நிற்கும்.

சிறுநீரில் கோளாறா?

காரட் கிழங்கைச் சாறு பிழிந்து இரண்டு அவுன்ஸ் வீதம் காலை மாலை அருந்தி வர சிறுநீரகங்களின் சீர்கேடுகள். நீரடைப்பு, இரத்த சோகை போன்ற நோய்கள் குணமடையும். நீர்க்கடுப்பு, சிறுநீர் தெளிவின்மை முதலிய கோளாறுகளுக்கும் காரட் சிறந்த மருந்தாகும்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

சிறுநாக்கு வளர்ச்சியா?

வாயில் சிறு நாக்கு வளர்ந்து தொங்கினால் உராய்ந்து இருமல் ஏற்படும். இலேசான குத்தலும் ஏற்படும்.

மிளகையும் உப்பையும் சேர்த்து பொடி செய்து அதை சிறு நாக்கின் மேல் வைத்து அழுத்தி வரவேண்டும். அதை அப்படியே துப்பிவிட வேண்டும். விழுங்கி விடக் கூடாது. இரண்டு மூன்று நாள்கள் காலை வேளையில் செய்துவர சிறுநாக்கு வளர்ச்சி குன்றி பழைய நிலையை அடைந்து விடும்.

புளியும் உப்பும் சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் நாளடைவில் அதன் வளர்ச்சி குன்றி சாதாரண அளவுக்கு வந்து விடும்.

சீதபேதிக்கு…

சீதபேதி கண்டால் உடனடியாக காரம் சாப்பிடுவதை நிறுத்த லேண்டும். கறிவேப்பிலையை அரைத்து தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரண்டொரு நாள்களில் நல்ல குணம் தெரியும்,

உலர்ந்த அசோக புஷ்பத்தை நன்றாகப் பொடி செய்து 10 கிராம் அளவு எடுத்து ஆழாக்கு நீரில் கலந்து உண்டால் இரத்த பேதி நிற்கும். இரத்தமும், சீதமும் பேதியும் நிற்கும்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இரத்த பேதி ஏற்பட்டு தொல்லை கொடுத்தால் முட்டைக்கோசைப் பொடியாக நறுக்கிப் பிழிந்து சாறெடுத்து ஒரு கரண்டி சாற்றில் அரைக்கரண்டித் தேனையும் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடனே குணம் தெரியும்.

ஒரு சிறு கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து இரவே ஊறவைத்து மறுநாள் காலை ஊறிய வெந்தயத்தை நன்றாக மென்று தின்று ஊறிய நீரையும் குடித்து விடவும். காரமில்வாத சாப்பாடு சாப்பிட்டு வாருங்கள் உடனே நிற்கும்

சீத பேதிக்கு கை வைத்தியமாக இஞ்சியை நசுக்கிச் சாறெடுத்து அதில் சிறிது உப்பையும் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

துளசி செடியை வேருடன் பிடுங்கிக் கழுவி, சுத்தம் செய்து நிழலில் காய வைத்து இடித்துத் தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை வெற்றிலையுடன் சேர்த்து மென்று சாப்பிட இரத்த பேதி நிற்கும்.

கைப்பிடியளவு வெட்சிப்பூ எடுத்து அதை நெய்விட்டு வதக்கி எட்டுக் குன்றிமணியளவு சீரகம், சிறுநாகப்பூ சேர்த்து அரைத்து வெண் ணொய், கற்கண்டு சேர்த்துச் சாப்பிட சீதபேதி நிற்கும்.

சுக்கில நஷ்டமா?

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

ஏலத்தைப் பொடி செய்து மூன்று கிரெய்ன் அளவு காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வர உஷ்ண பேதி, இருமல், கபக்கட்டு. சுக்கில நஷ்டம் முதலியவை நீங்கும். பசியைத் தூண்டும். சாதாரண வாய்வுத் தொந்தரவுகள் மறையும்.

*எட்டி விதையை நன்றாகத் தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை சிறிது சிறிதாக (1 கிரெய்னிலிருந்து 5 கிரெய்ன் வரை) உட்கொண்டு வந்தால் சீதபேதி, மலபந்தம், தாது நஷ்ட நோய்கள் முதலியவையும். வாத நோய்களும் நீங்கிவிடும். இதைச் சாதாரண ஜுரங்களுக்கும் கொடுப்பதுண்டு.

ஓரிலைத் தாமரை கைப்பிடி, சீரகம் அரைத்தேக்கரண்டி அரைத்து கொட்டைப் பாக்களவு காலை, மாலை ஒரு வாரம் சாப்பிட குணம் தெரியும்.

Related articles

Recent articles

spot_img