அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஞாபக சக்தி, தலை சுற்றல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

ஞாபக சக்திக்கு…

வல்லாரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். அதிகம வல்லாரைக்கீரை கிடைக்கும் பொழுது சாறெடுத்து சர்பத் செய் வைத்துக் கொண்டு அதை தினமும் பருகி வர ஞாபக சக்தி பெருகு

பாதம் பருப்பையும் தேங்காயையும் அடிக்கடி சாப்பிட்டு 6 அதிலுள்ள மாங்கனீஸ் சத்து ஞாபக சக்தியைப் பெருக்கும்.

வல்லாரை இலைச்சாற்றில் அரிசி திப்பிலியை ஊற வைத்து ஊறி பின்பு வெயிலில் உலர்த்த வேண்டும். அதே திப்பிலியை இப்படி ஏ முறை ஊற வைத்து, உலர்த்தி உண்டு வந்தால் நல்ல நினைவாற்ற உண்டாகும். கோழை இருமலும் நீங்கும்.

தாமரைப் பூவிதழை நீரில் காய்ச்சி காலை, மாலை குடித்து வர மூளை பலப்படும் தேகமும் சிவந்து காணும். புத்தி சூட்சுமமாகும். நரை திரை மாறி விடும்.

தலையில் வழுக்கையா?

மருந்து கடைகளில் கிடைக்கும் கரியபவழத்தை அரைத்து விழுதாக்கி வழுக்கையின் மீது தடவி வர இரண்டொரு வாரத்தில் முடி வளரத் தொடங்கி விடும்.

தந்தி மேகமா?

சிறுநீர்க் கழிக்கும் போது தாதுவும் சேர்ந்து வெளியாவதை ‘தந்தி மேகம்’ என்பர். இதனால் எரிச்சல், வேதனை எதுவும் இல்லா விட்டாலும் உடலை பலவீனப்படுத்தி விடும். இதைத் தடுக்க அரை தேக்கரண்டி மருதாணி இலைச் சாற்றோடு இரண்டு அவுன்சுக்குக் குறையாமல் பாலோ அல்லது நீரோ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் தெரியும். சுவைக்காக சிறிது சர்க்கரை வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

தவளை சொறியா?

அதிகாலையில் புற்களின் மீது முத்து முத்தாகப் படிந்துள்ள பளிநீரை தவளை சொறியின் மீது தடவி வர மறைந்து போகும்.

தலை சுற்றுகிறதா…?

தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலிய சாதாரணத் தொல்லைகளுக்கு கொத்துமல்லி, கசகசா, பருத்தி விதை இம்மூன்றையும் சம எடை எடுத்துத் தூள் செய்து இரண்டு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து. காலை, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர குணம் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 17 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.