health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! எடை குறைய, ஆஸ்துமா, குத்திருமல், மூலம்…

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மூல ரோகத்திற்கு…

வாதுமை நெய்யில் கண்டங்கத்திரிப் பூக்களை போட்டுக் காய்ச்சி
மூலமுள்ள இடத்தில் தடவிவர நலம் காணலாம்.

குத்திருமல் சரியாக…

பண்ணைக் கீரை கதிர்களில் உள்ள விதையை கசக்கி எடுத்து 16 கிராம் பொடி செய்து 200 மி.லி. பசும்பாலில் போட்டுக் காய்ச்சி காலை, மாலை மூன்று நாள்கள் குடித்து வர குத்திருமல் குணமாகும். கப இருமல், மூத்திர தாரை தொடர்பான நோய்கள், இரத்த பேதி, சீதபேதி இவையும் நீங்கும்.

உடல் எடை குறைய…

ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பும் நாக்கு பொறுக்கும் அளவு ஒரு தம்ளர் வெந்நீரை கடகடவென்று விழுங்க உடல் எடை பிரமிக்கத்தக்க வகையில் குறையும்.

பித்த மயக்கத்திற்கு…

வாரத்தில் ஒரு நாள் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

தேனிலே மருத்துவம்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெறுவெதுப்பான நீரிர்ஸ் தேன் கலந்து குடித்துவர உடல் பருமன் குறையும்

மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறுடன் தேன் அரை அவுன்ஸ் கலந்து
காலை. மாலை குடித்துவர காமாலை குணமாகும்.

இரவில் 1 ஸ்பூன் தேனை பாலில் கலந்து குடிக்க உடல் பருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வர தலை கிறுகிறுப்பு போகும்.

பசலைக் கீரையை கொதிக்க வைத்து அதன் தெளிந்த நீரோடு தேன் கலந்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.

மூன்று சொட்டு இஞ்சி சாறுடன் தேன் கலந்து புகட்ட குழந்தைகள் கக்குவது நிற்கும்.

சுக்கை சுட்ட சாம்பலாக்கி சிட்டிகை அளவை தேனில் குழைத்துச் சாப்பிட சளி விரைவில் வெளியேறும்.

பிளாஸ்டிக் பேப்பரில் தேனை விட்டால் ஊறவில்லையெனில் சுத்தமான தேன் என அறியலாம்.

தீக்குச்சியை தேனில் நனைத்து உரச தீப்பற்றினால் தேன் சுத்தமானது.

வசம்பை சுட்டுப் பொடி செய்து தேனில் குழைத்துக் கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சி வெளியேறும்.

ஆஸ்துமா நோயாளிகள் காலையும் மாலையும் 2 ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.