health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பெண்கள் மார்புவலி, காசநோய், அதிர்ச்சி, படுக்கையில் சிறுநீர், எடை குறைய..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

திடீர் அதிர்ச்சியா?

சிலருக்கு திடீர் அதிர்ச்சியால் கை கால்கள் ஜில்லிட்டுப் போய்விடும். உடனே கை கால்களை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். வெறுங்கையால் தேய்ப்பதை விட சுக்குப் பொடியைத் தூவித் தேய்க்க உடனடியாக உடல் வெப்ப நிலைக்கு மாறும். அதிர்ச்சியும் நீங்கும்.

பெண்களின் மார்பு வலி நீங்க…

குப்பை மேனி இலையை உலர்த்தி இடித்து சலித்து சம அளவு சர்க்கரை சேர்த்து ஒன்றே முக்கால் தம்ளர் காய்ச்சிய பசும்பாலில் சிட்டிகையளவு போட்டு காலை, மாலை சம அளவு பருகிவர வீக்கமும். வலியும் தணியும். மார்பில் வனப்பும் எழுச்சியும் உண்டாகும்.

காச நோய் கட்டுப்பட..

கற்பூரவல்லி இலை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் நல்லது. வாரத்தில் ஒரு நாள் கற்பூரவல்லி இலைகளை சாப்பிட கபத் தொல்லை. சளித்தொல்லை நீங்கும். காச நோய் கட்டுப்படும்.

படுக்கையில் நீர் போவதைத் தடுக்க…

அஸ்வகந்தி வேகியத்தை நெல்லிக்காயளவு பாலுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு இதில் பாதியளவு கொடுத்தால் போதும். படுக்கையில் சிறுநீர் போவது நின்று விடும்.

உடல் பூங்கொடி போல் இருக்க…

கல்யாண முருங்கை இலை. பூ ஆகியவற்றை இரண்டு கைப்பிடியளவு எடுத்து 2 டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை டம்ளராக வற்றியதும் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் பருகி வர உடல் பூங்கொடி போல் ஆகி வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.