health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தீப்புண் ஆற, சேற்றுப்புண், பல்வலி, அஜீரணம், தாய்ப்பால்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தீப்புண் ஆற…

கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண் மீது தடவி வர புண் ஆறும்.

சேற்றுப் புண்ணுக்கு…

உளுந்தமாவில் எலுமிச்சம்பழச்சாறு விட்டுக் குழப்பி சேற்றுப் புண் மீது நன்கு தடவி வர நமைச்சல், அரிப்பு நீங்கி புண்ணும் சீக்கிரம் ஆறிவிடும்.

பல்வலி நீங்க…

முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து வலி இருக்கும் பல்லில் வைத்தால் பல்வலி தீரும். சீழ் வரும். தந்த ரோகமும் குணமாகும்.

அஜீரண பேதி குணமாக…

உளுந்துமாவில் களியோ அல்லது கூழோ கிண்டிச் சாப்பிட்டு வர அஜீரண பேதி குணமாகும்.

தாய்ப்பால் பெருக…

பிரசவமான பிறகு உணவுடன் எந்த வகையிலாவது எள்ளைச் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் பெருகுவதுடன் உடலும் திடகாத்திரமாக விளங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.