health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சருமநோய், தொழுநோய், காசநோய், கணைச்சூடு, கண்நோய், விக்கல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

வெப்பம் தணிக்கும் வில்வம்

வில்வம் தொழுநோய், மகாரோகம் போன்ற கொடிய உஷ்ணமுள்ள சரும வியாதிகளைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

தொழுநோய் உள்ளவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து ஈர உடையுடன் நூறு ஆண்டுகள் முதிர்ந்த வில்வ இலை கைப்பிடி எடுத்து வெறும் வயிற்றில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு ஒரு மணி நேரம் கோயிலைச் சுற்றி வலம் வர 9 மாதங்களில் தொழுநோய் மறையும்.

தினமும் ஐந்து வில்வதளமும் ஐந்து மிளகும் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர நீண்டகால காசநோய்களும் நீங்கும்.

முதல் நாள் இரவே வில்வ இலைகளை குளிர்ந்த நீரில் போட்டு மூடி வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்து வர மேகநோய், கைகால் பிடிப்பு, கிரந்தி இவை நீங்கி மூளைக்கு பலத்தையும் புத்திகூர்மையையும் உண்டுபண்ணும். தாது பலத்தையும் அதிகரிக்கும். திக்குவாயும் நீங்கும். தீராத குன்மநோய் தீரும்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

நுணா இலை, ஓமம், வில்வக் கொழுந்து ஆகியவற்றை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பருக கணைச்சூடு நீங்கும்.

கண்களில் வலி, நமைச்சல், சிவப்பு போன்றவை தோன்றினால் வில்வ
இலையை வதக்கி கண் இமைகளின் மீது ஒத்தடம் கொடுக்க குணமாகும்.

வெறும் வயிற்றில் சுத்தமான வில்வ கொழுந்தை வாயில் போட்டு மென்று தின்று பசுவின் பால் பருகி வர 48 நாள்களில் உள் காங்கை நீங்கும். மேனி பளபளக்கும். ஆனால், அப்போது உணவில் புளி. காரம் குறைக்க வேண்டும்.

வில்வ தழை சாப்பிட்டு வர உடலில் இருக்கும் விஷத்தன்மை நீங்கும். மேனி பளபளக்கும். சரீரத்திலுள்ள சகல வியாதிகளையும் போக்கி இரத்த விருத்தி ஏற்படுத்தும். நூறு வயதிற்கு மேற்பட்ட வில்வ இலைகளை தினமும் சாப்பிட்டு வர புற்றுநோயும் குணமாகும்.

தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கும் போது சீயக்காய்க்கு பதில் வில்வப் பழத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க அழுக்குகள் நன்றாய் போவதுடன் உடல் குளிர்ச்சியடையும்.

வில்வ வேர் 10 கிராம். நெற்பொரி 10 கிராம், சந்தனம் 4 கிராம். கால் லிட்டர் சுத்தமான நீரில் போட்டு 4 அவுன்ஸ் வரும் வரை சுண்டக் காய்ச்சி காலை. மாலை பருக விக்கல் நோய் குணமாகும்.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.