காலை டிபன் சுவையான இத செஞ்சு சாப்பிடுங்க !

Published:

weat - 2026கோதுமை பருப்பு தோசை!
தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு                 – 3 கப்

துவரம் பருப்பு                  – 1 கப்

கொத்தமல்லித்தழை        – சிறிதளவு

மிளகாய் வற்றல்              – 5

சீரகம்                              – 1 ஸ்புன்

உப்பு                                – தேவையான அளவு

எண்ணெய்                       – தேவையான அளவுkothumai thosai - 2026செய்முறை :

முதலில் துவரம்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லிதழை மற்றும் மிளகாய் வற்றலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் துவரம்பருப்பு மசியலுடன் கோதுமை மாவு, அரைத்த விழுது, சீரகம், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் சற்று கனமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான கோதுமை பருப்பு தோசை தயார்.

கோதுமை பருப்பு தோசையுடன் வெங்காயத் துவையல், மல்லி சட்னி, சாம்பார் போன்றவற்றையுடன் கார சாரமாக தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும்.
கெச்சப்புடன் பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img