கொழுக்கட்டை ஸ்பெஷல்: புரோட்டீன் கொழுக்கட்டை!

சமையல் புதிது சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0814_170615

புரோட்டீன் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு. – ஒரு கப், சோயா பீன்ஸ். – அரை கப், கடுகு. – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி. – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை. – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.


கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ் பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்… புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.