cellphone-theft
cellphone-theft

மதுரையில் நடைபயிற்சி சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கத்தியால் மண்டையில் வெட்டி விலை உயர்ந்த செல்போன் பறிப்பு பரபரப்பு!

மதுரை மாடக்குளம் பெரியார் குறுக்கு தெரு . பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் வயது 62 இரயில்வே துறையில் டெக்னிசனாக வேலை செய்து ஒய்வு பெற்றவர்.

இவர் மாடக்குளம் மெயின் ரோட்டில் வழக்கமாக அதிகாலையில் நடைப்பயிற்சி செய்து விட்டுக்கு தேவையான பால் வாங்கி வரும் பொழுது பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி அருகே ரோட்டில் நடந்து சென்றவரை கத்தியால் மண்டையில் வெட்டியதால் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

cellphone-theft-rubber-tyre
cellphone-theft-rubber-tyre

அவரிடன் விலை உயர்ந்த செல்போனைப் பறிக்கும் போது பாதிக்கப்பட்ட செல்வம் இரண்டு மர்ம நபர்களையும் தரையில் இந்த இரு சக்கர வாகன டயரை எடுத்து இரண்டு பேரையும் அடி பின்னி எடுத்து விட்டார்

இருந்தாலும் செல்போனை மீட்க முடிய வில்லை திருடர்கள் செல்போனை பறித்துச் சென்று விட்டனர் இதனால் அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் சம்பந்தப்பட்ட S.S. காலனி குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சக்கரவர்த்திக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதி ழுழுவதும் தீவிர விசாரணை செய்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending