கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஆளுநர் புரோஹித்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
governor banwarilal purohit
governor banwarilal purohit

கொரோனாவில் இருந்து ஆளுநர் புரோஹித் குணமடைந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டதை அடுத்து, ஆளுநர் தன்னை முதலில் தனிமைப் படுத்திக் கொண்டார். பின்னர், கடந்த வாரம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா பாசிட்டிவ் என சோதனை அறிக்கையில் முடிவுகள் வந்ததை அடுத்து, அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தற்போது கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வந்துள்ளதாகவும், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

governor-recovered
governor-recovered

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.