கணவன் தற்கொலை! கட்டிய மனைவி காதலனோடு சென்றார் !

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்

poison 1 - 2026
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருவிழமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவருக்கு, திருவாரூர் மாவட்டம் நாககுடி என்ற ஊரைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுடன்  40 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைப்பெற்றது.

இருவருக்கும் இடையே 16 வயது வித்தியாசம். மேலும் கல்யாணத்தில் கௌசல்யாவிற்கு சம்மதம் இல்லை என்று தெரிகிறது. அவர் தனது ஊரில் உள்ள வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத அவரது பெற்றோர் அவருக்கு பாக்யராஜைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆடிமாதத்துக்காக கௌசல்யாவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு கௌசல்யா தன் முன்னாள் காதலனை சந்தித்துள்ளார். யாருக்கும் தெரியாமல் இருவரும் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர். அவரைத் தேடிப்பார்த்த பெற்றோர் எங்கும் கிடைக்காததால் கௌசல்யாவின் கணவர் பாக்யராஜுக்கு இது பற்றிக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யாவின் கணவர் பாக்யராஜ் மன உளைச்சலுக்கு ஆளாகி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.