பஞ்சு துணியை உள்ளே வைத்து செய்த சிசேரியன் ! பெண் உயிரிழந்த பரிதாபம்!

Published:

operation - 2026
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தனுஸ்ரீ. தனது பிரசவத்துக்காக தனது தந்தையோடு அவரது ஊருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பணிபுரியும் மருத்துவர் தனியாக கிளினிக் வைத்திருப்பதாகவும் அங்கு சென்று சிகிச்சை பார்த்துக் கொள்ளுங்கள் என அவரை அங்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தனுஸ்ரீ மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அவரைப் பரிசோதித்த அந்த மருத்துவர் அவருக்கு நீர்ச்சத்துக் குறைவாக இருப்பதாகவும் அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சை மூலம்  ஆண் குழந்தைக்கு தாயானார் தனுஸ்ரீ. ஆனால் பிரசவத்திற்கு பின் அவருக்கு  தொடர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

அவரது பிரேதப் பரிசோதனையின் போது அவரது வயிற்றில் பஞ்சுத்துணிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்ட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையின் போது துடைப்பதற்குப் பயன்படுத்தக் கூடியதாகும். பிரசவத்தின் போது அந்த மருத்துவர் அலட்சியமாக அதனை வயிற்றில் வைத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் உருவாகியுள்ளது. இதை தொடரந்து, காவல்துறை இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img