
நாள்தோறும் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்னவென்று தெரியுமா?
நாம் நாள்தோறும் 10 கிராம் அளவு கொண்ட நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய ஆரோக்கிய மாற்றங்கள் ஏராளம் என நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆராய்ச்சிக் குழு சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பொது மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆராய்ச்சி முடிவில் நிலக்கடலையை தினமும் சாப்பிடாத நபர்களை விட தினமும் நிலக்கடலையை சிறிதளவு சாப்பிட்டு வந்த நபர்கள் நீண்ட காலம் நோய் தாக்குதல்கள் அதிகமின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.
நிலக்டலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் ஆகியவை நமது உடலில் ஏற்படக்கூடிய நோய்களான இதய நோய், புற்று நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகின்றன.
அதேபோல் நிலக்கடலையை சாப்பிட்டால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்பதற்காக அதிகம் சாப்பிடக் கூடாது. தினமும் 5 முதல் 10 கடலை அதாவது 10 கிராம் அளவு கடலை மட்டும் சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும்.
இவ்வாறு அந்த ஆராய்ச்சி முடிவில் கூறப்படுகிறது.
ஆகவே நாமும் நிலக்கடலையை சாப்பிடடு நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்.



