மர்மமான முறையில் பெண் கொலை ! கொலையாளி விரைவில் பிடிபடுவார் ! காவல்துறை !

Published:

murder - 2026மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிங்கி வயது 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். இருவரும்  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பிங்கி, டாட்டூ வரைதல், சேலை விற்பனை ஆகியன செய்து வந்தார். தொழிலதிபரான பிங்கி, தற்போது, சென்னை அண்ணாநகரில் குடியிருந்து வந்தார். இவருடன் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும் தங்கியுள்ளார்.

அந்த வாலிபர் நேற்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பிறகு வீடு திரும்பி அவர் வந்தபோது குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.camara - 2026இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்றனர். பிங்கியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிங்கி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிங்கியின் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்றுவிட்டு பிறகு அவர்கள் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் யார் என்று காவல்துறை விசாரித்து வருகின்றனர். பிங்கியுடன் தங்கியிருந்த வாலிபரிடமும் விசாரணை நடந்து வருகிறது.pinky - 2026இது குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் , பிங்கி கொலையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பிங்கியுடன் தங்கியுள்ள வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதோடு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இரண்டு பேர் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் பிங்கியின் செல்போனையும் ஆய்வு செய்து வருகிறோம்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். அதன்அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. பிங்கியின் கொலை வழக்கில் முக்கிய தடயம் சிக்கியுள்ளது. மேலும், கொலையாளிகளையும் அடையாளம் கண்டுவிட்டோம். இதனால் கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். கைதானவர்களிடம் விசாரித்த பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றார்.

 

Related articles

Recent articles

spot_img