மாணவி மீது கை வைத்த ஆசிரியர் ! ஆசிரியர் மீது கை வைத்த மாணவர்கள் !

இந்தியா கிரைம் நியூஸ்

thulunghana - 2026தெலுங்கானாவில் கரீம் நகர் எனும் மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட திம்மாபூர் என்னும் பகுதியில் ஸ்ரீ சைதன்யா பொறியியல் கல்லூரி உள்ளது.  இந்தக் கல்லூரியில் துணைத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

உதவி பேராசிரியரான வெங்கடேஷ் என்பவர் தேர்வு கண்காணிப்பாளராக ஈடுபட்டார். அப்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தேர்வு முடிந்த பிறகு தன்னுடைய சக மாணவிகளிடம் அழுது புலம்பியுள்ளார்.

இதுபற்றி அறிந்த வெங்கடேஷ் கல்லூரியில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனை அறிந்த சக மாணவர்கள் விரட்டி சென்று பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.

மாணவர்கள் ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தில் புகாரளித்திருந்தனர். கரீம் நகர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.