சந்தடி சாக்கில்… டிரம்ப்-பின் கையை ஓங்கி அடித்து… பார்வையாளர்களை உசுப்பி விட்ட மோடி!

Published:

trump modi1 - 2026

பிரான்ஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சு நடத்தினார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் மிக இயல்பாக இருந்தபடி பதில் அளித்தனர். இருவரும் தங்களுக்குள் நகைச்சுவைகளை பரிமாறியபடி, இயல்பாக பேசிக் கொண்டிருந்தது பலரையும் ஈர்த்துள்ளது.

செய்தியாளரின் கேள்விக்கு ஹிந்தியில் பதிலளித்த மோடி, காஷ்மீர் விவகாரம் என்பது இருநாட்டு உள் விவகாரம். இது இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பேச வேண்டிய ஒன்று! அதில் மத்தியஸ்தம் செய்வதற்கு தேவையே இல்லை; இருவரும் அதைப் பற்றி தெளிவாகப் பேசினோம். என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகள் இடையிலான பிரச்சினை; இந்தியா-பாகிஸ்தான் பேசி தீர்த்து கொள்வார்கள்; காஷ்மீர் விவகாரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக மோடி என்னிடம் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும்தான் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்! என்று கூறினார் டொனால்டு டிரம்ப்!

இந்திய மக்களின் பிரதிநிதியாக தற்போது டிரம்பை சந்தித்து பேசியுள்ளேன். 1947ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தன. எனவே, எங்களின் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றார் மோடி!

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மோடி ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், டிரம்ப், மோடி நன்றாக ஆங்கிலத்தில் பேசுவார். ஆனால் இப்போது பேச அவர் விரும்பவில்லை” என்று கிண்டல் அடித்தார். இதற்கு சிரித்துக் கொண்டே டிரம்பின் கையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மோடி. அப்போது டிரம்பின் கையில் ஓங்கித் தட்டினார்.

அவ்வளவு சீரியஸான உரையாடலில் கூட இயல்பாக மோடி நடந்து கொண்ட விதம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதே நேரம், பூனை அப்பம் பிய்த்துக் கொடுத்த கதையாக நான் வந்து நடுவுல உங்களுக்கு சமரசம் செய்து வைக்கிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் தானாகவே வெளியேறினார் ட்ரம்ப் என்று கருத்து பதிவு செய்து வருகின்றனர் டிவிட்டர் தளங்களில்.

டிரம்ப் கையை ஒரு தட்டு தட்டி விட்டார் மோடி. இந்தத் தட்டு, டிரம்புக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கும் சேர்த்துத்தான்… என்று கருத்திடுகின்றனர் டிவிட்டர் தளத்தில்!

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img