ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் வெகுவாக சரிவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
gstcoll - 2026

புதுதில்லி: கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி. கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,02,083 கோடியாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தின் 98,202 கோடி ஜிஎஸ்டி வசூலில் சிஜிஎஸ்டி (CGST) 17,733 கோடியும், எஸ்ஜிஎஸ்டி (SGST) 24,239 கோடியும் மற்றும் ஐஜிஎஸ்டி (IGST) 48,958 கோடியும் வசூல் ஆகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில், ஜிஎஸ்டி வருவாயில் மத்திய அரசின் பங்கு 40,898 கோடியாகவும், மாநிலங்களின் வருவாய் 40,862 கோடியாகவும் இருக்கிறது.

09 June30 GST - 2026

சென்ற 2018ம் வருட ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வருவாயில் 4.51 சதவீதம் அதிகரித்து உள்ளது. எனினும் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதத்தில் 3881 கோடி ரூபாய் சரிவு கண்டுள்ளது.

இதே போல் கடந்த நிதி ஆண்டிலும் ஆகஸ்ட் மாத வசூல் சரிவு கண்டிருந்தது.

இந்த நிதியாண்டைப் பொறுத்த வரை, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,13,865 கோடியாகவும், மே மாதத்தில் 1,00,289 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 99,939 கோடி மற்றும் ஜூலை மாதத்தில் 1,02,083 கோடியாகவும் இருந்தது!

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில், ஏப்ரல் மாதம் மட்டுமே ரூ.1,13,865 கோடி என்ற அதிக பட்ச வசூல் அளவை எட்டியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.