பாகிஸ்தான் அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published:

paki 1 - 2026

இந்தியாவின் சந்திரயான் 2, வில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு மேல் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டரின் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிப்பால் விஞ்ஞானிகள் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிகழ்வுகளை நேரடியாக காண, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் வந்த பிரதமர் மோடி உள்பட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்கள். `புதிய முயற்சிகளில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும்.

இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்’ என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் மோடி. நாட்டின் ஜனாதிபதி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை நாட்டின் பல்வேறு பிரபலங்களும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரி, சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை கலாய்க்கும் விதமாக ட்வீட் செய்து வந்தார்.

பாகிஸ்தான் அமைச்சரின் ட்வீட்டுக்குத் தொடர்ந்து நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துவந்தனர். இதனைக் கவனித்த ஃபவாத் ஹுசைன், `இந்தியர்கள் என்னைத் திட்டுவதைப் பார்க்கும்போது நான் ஏதோ அவர்களின் நிலவு திட்டத்தை தோல்வியடையச் செய்ததுபோல் இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி ஆறுதல் சொல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “சாட்டிலைட் குறித்து அரசியல்வாதி போன்று அல்லாமல் ஏதோ விண்வெளி வீரர் போல் உரையாற்றுகிறார் மோடி. இந்திய நாடாளுமன்றம், ஏழை நாட்டின் 900 கோடி ரூபாயை வீணாக்கியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக, அவர் பதிவு செய்த அந்த ட்வீட்டில் சாட்டிலைட் என்னும் வார்த்தையை தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், அவரை வறுத்தெடுத்தனர். ஒரு நாட்டின் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட்டின் ஸ்பெல்லிங்கூட தெரியவில்லை. முதலில் அதைக் கற்றுக்கொண்டு வாருங்கள். பிறகு பேசலாம்’ எனக் கலாய்த்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட் ஸ்பெல்லிங் தான் தெரிய வேண்டாம், குறைந்தபட்சம் போன்களில் எழுத்துப் பிழைகளை தானாகவே திருத்தி சரியான ஸ்பெல்லிங்குளைத் தரும் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன் இருப்பது கூடவா தெரியவில்லை’ என்றும் பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து ஃபவாத் ஹுசைன் செளத்திரி, கடந்த காலங்களில் சொதப்பலாக அளித்த பல்வேறு உரைகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img