dtv dhinakaran - 2026

புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகளுக்கு எதிர்ப்பாக மாநில செயலாளர் நியமிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக இருந்த வேல்முருகன் மீது கட்சி நிர்வாகிகள் அனைவரும் குற்றம்சாட்டி அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் கட்சி தலைமை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அக்கடிதத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் ஒவ்வொருவராக கட்சி மாறி ஆட்டம் கண்டிருகும் வேளையில் புதுச்சேரியிலும் அமமுக வின் நிலைமை மோசமாக ஆனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending