தில்லியில் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து! பொருட்கள் நாசம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
fire - 2026

தில்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின.

தில்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இயங்கி வந்த கிடங்கு ஒன்றில் எந்திரங்களுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஏராளமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் அந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீ பரவியதால் கிடங்கு முழுவதும் கரும்புகையுடன் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.