ஓசூரில் கல்லூரி மாணவன் காரில் விஷவாயு தாக்கியதில் மயங்கிய நிலையில் உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிநாத் என்பவரி மகன் ரக்ஷித் (21) திருச்சியில் NIIT பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வகுப்புப் பாடம் தொடர்பாக, செயல்முறை ஆய்வுக்காக கார்பன் மோனோ ஆக்ஸைடு கேஸ் சிலிண்டரை தன் காரில் எடுத்து வரும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு ஓசூர் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை முன் காரிலியே மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
ரக்ஷித் தந்தை ஹரிநாத் தன் கைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் ரக்ஷித் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்து அவரது செல்ஃபேனுக்கு தொடர்பு கொண்டுள்ளார், செல்ஃபேன் ரீங் ஆன நிலையில் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பயந்து போன ரக்ஷித்தின் தந்தை ஹைநாத் தனது ஃபோன் செயலி மூலம் வரைபடத்தை தெடர்பு கொண்டதில் அவரின் செல்ஃபோன் டவர் ஓசூர் உள்வட்ட சாலையில் உள்ள இஐசி பகுதியை காட்டியது.
இதைத் தொடர்ந்து அவர் தந்தை செல்ஃபோன் லோகேஷன் காட்டிய இடத்தில் சென்று பார்த்ததில் காரின் உள்ளே மயங்கிய நிலையல் ரக்ஷித்தை கண்டுள்ளார்.
உடனே கார் கண்ணாடியை உடைத்து அவரை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ரக்ஷித்தின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூற உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சிப்காட் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




