சிவன் கோயில் அருகே மது அருந்திய இஸ்லாமிய இளைஞர்கள்! ஒருவர் கைது!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
desi daaru alcohol - 2026

கோயில் அருகே முஸ்லீம் இளைஞர்கள் மது அருந்தியதை எதிர்த்து ஜார்க்கண்ட் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் ‘சுத்திகரன்’ எனப்படும் தூய்மைப் படுத்தும் சடங்கையும் நடத்தினர்.

சிவன் கோயில் அருகே மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மது அருந்தியதை அடுத்து ஜார்க்கண்டின் ஷிகாரபாரா கிராமத்தில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து புகார் அளிக்கப் பட்ட பின்னர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இர்பான் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தக்தர்வா மியான், ஷிகாரிபாரா கிராமத்தைச் சேர்ந்த குடா மியான் ஆகிய இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. இதை அடுத்து, கோயிலை ‘சுத்தம் செய்யும் சடங்கு’ குறித்து முடிவு செய்ய கிராம மக்கள் நேற்று இரவு கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, சில பழங்குடி ஆண்கள் சிவன் கோவிலுக்கு வெளியே மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மது அருந்துவதைக் கண்டு கிராம மக்களை எச்சரித்துள்ளனர். கிராமவாசிகள் வந்தவுடன், அவர்கள் தப்பி ஓட முயன்றனர், ஆனால் ஒருவர் பிடிபட்டார்! பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்த செய்தி பரவியவுடன், மக்கள் அங்கே கூடினர். எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தவிர்க்க அண்டை கிராமத்திலிருந்து கூடுதல் போலீஸ் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.