ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சி: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைவரிசை?

Published:

air-india-flightபுது தில்லி: அண்மையில் தில்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்று அண்மையில், தில்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், அந்த பயணிக்கு விமானப் பணிப் பெண்கள் அவசர உதவிகளைச் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்து, தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டனர். பின்னர் உடல்நலக்குறைவு என்று கூறிய பயணியைச் சோதித்தனர். பின்னர் அந்த 5 பேரும் விமானியை வரச் சொல்லுங்கள் அல்லது தலைமை விமானி அறைக்குள் அனுமதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் அந்த 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். அதேபோல் வெகுநேரம் வற்புறுத்தியும் அவர்களை காக்பிட் அறைக்குள் அனுமதிக்கவில்லை, தலைமை விமானியும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசர அவசரமாக வெளியேறிச் சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 5 பேர் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது. அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப்பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச் சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி செயல்பட்டு அவர்கள் விமானத்தை கடத்தி நாசகர செயலில் ஈடுபட முயன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துதுறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் விமான காக்பிட் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img