காந்தி 150: தலைவர்கள் மரியாதை!

Published:

modi gandhiji stal - 2026

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்ப்படுகிறது. இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று காந்திஜியின் மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, கடந்த வருடமே திட்டமிட்டு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

காந்தி -150ஐ முன்னிட்டு தில்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக., மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி உள்ளிட்ட பலரும் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.

gandhiji sand art sudarsan patnaik - 2026
ஒடிஷா மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வரைந்த மணல் ஓவியங்கள்….

சென்னை மெரினா கடற்கரையில் காந்திஜியின் உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

காந்தி 150 ஐ முன்னிட்டு, அண்ணல் காந்தியடிகளை போன்றும் வகையிலான பாடல்களை கர்நாடக இசைக்கலைஞர்கள் பாடினர்.

Related articles

Recent articles

spot_img