ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்!

Published:

IMG 20191009 WA0003 - 2026

ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டிய பயணிகள் ரயில் வந்து விட்டது என்ற பதற்றத்தால் ஃபுட் ஓவர் பிரிட்ஜ் மேலாகச் செல்லாமல் ஓட்டமும் நடையுமாக தண்டவாளத்தைக் கடந்து சென்றார்கள்.

அதே நேரத்தில் காகஜ்நகர் செல்லும் ரயில் நகரத் தொடங்கியதால் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிளாட்பாரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

ரயில்வே அதிகாரிகள் செய்த சிறிய தவறால் பல பயணிகளின் உயிர் அபாயத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவம் செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது.

திங்களன்று மாலை 3.50 மணிக்கு பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் ஹௌரா பலக்னாமா எக்ஸ்பிரஸ் ரயில் வரவேண்டி இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் பலக்னாமா ரயில் நான்காவது பிளாட்பாரத்தில் வந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.

அதனால் ஹௌரா பலக்னாமா எக்பிரஸ் ரயிலில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் வந்துவிட்டது என்ற பதற்றதால் ஃபுட்ஓவர் பிரிட்ஜில் ஏறாமல் ஓட்டமும் நடையுமாக நேராக தண்டவாளத்தில் இறங்கி கடந்து செல்ல முயன்றார்கள்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

அதே நேரத்தில் காகஜ்நகர் நோக்கிச் செல்லும் பாக்கியநகர் ரயில் நகரத்தொடங்கியதால் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த பயணிகளின் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இறுதியில் வந்தது எம்எம்டிஎஸ் தான் என்று அறிந்துகொண்ட பயணிகள் மீண்டும் ஒன்றம் நம்பர் பிளாட்பாரத்திற்குத் திரும்பினார்கள்.

பாக்கியநகர் எக்ஸ்பிரஸின் இஞ்சின் முன்பாகவே சிலர் கடந்து சென்றதும்… அதே நேரத்தில் சிலர் தண்டவாளத்தை தாண்டிக் கொண்டு இருந்ததும்… சற்று நேரம் பதற்றமான சூழ்நிலையை அங்கு உருவாக்கியது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img