பிச்சைக்காரன் வீட்டில் பண மூட்டைகள்! குடும்பத்தை தேடி ராஜஸ்தான் செல்லும் போலீசார்! ஏன் தெரியுமா?

Published:

IMG 20191009 WA0002 - 2026

பிச்சைக்காரன் வீட்டில் பண மூட்டைகள்! குடும்பத்தை தேடி ராஜஸ்தான் செல்லும் போலீசார்! ஏன் தெரியுமா?

மும்பையில் வெள்ளிக்கிழமை காலமான ஒரு பிச்சைக்காரனின் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசார் அங்கிருந்த பண மூட்டைகளைப் பார்த்து வியந்து போயினர்.

அவன் வீட்டில் கிடைத்த நாணயங்களை எண்ணுவதற்கு சுமார் 8 மணி நேரம் பிடித்ததாம்.

அதுமட்டுமல்ல அவனுக்கு பேங்க் பேலன்ஸ் கூட மிக அதிக அளவில் காணப்பட்டதால் அந்த தொகையை அவனுடைய குடும்பத்தாரிடம் சேர்க்கும் வேலையில் உள்ளனர் காவல்துறையினர்.

ரயில்வே போலீசார் தெரிவித்த விவரங்களின்படி… மும்பை ‘கோவண்டி’ பகுதியில் வசிக்கும் பிர்பாசந்த் அஜாத் என்பவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.

அண்மையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் கோவண்டி ஸ்டேஷன் அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் போது விபத்து நேர்ந்தது. ரயில் மோதி இறந்து போனார்.

ரயில்வே போலீசார் அங்கிருந்த தள்ளுவண்டிக் காரர்களின் உதவியுடன் இறந்தவரின் விவரங்களை சேகரித்து அவர் வீட்டை சோதனையிட்டனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

வீட்டிற்கு சென்ற ஜிஆர்பி அதிகாரிகள் அவனுடைய வருமானத்தைப் பார்த்து வியந்து போயினர்.

கட்டப்பட்டிருந்த முட்டைகளில் சுமார் 1.5 லட்சத்துக்கு மேல் சில்லரை வெளிப்பட்டது. அதனை எண்ணுவதற்கு அவர்களுக்கு 8 மணி நேரம் பிடிப்பதாக தெரிவித்திருந்தார்கள்.

அதோடுகூட பிக்சட் டெபாசிட்கள் ரூபாய் 8 லட்சத்து 77 ஆயிரம் இருந்ததைக் கண்டு மலைத்தனர்.

அங்கே கிடைத்த அவனுடைய ஆதார் கார்டு பான் கார்டு சீனியர் சிடிசன் கார்டுகளின் ஆதாரத்தைக் கொண்டு அஜாத் ராஜஸ்தானைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டனர்.

அவனுடைய குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பதற்காக போலீசார் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img