போதையில் ஓட்டிய டிரைவர்! ஆட்டம் கண்ட ஆம்னி பஸ்! பயணிகள் அலறல்!

இந்தியா பொது தகவல்கள்
amni - 2026

பெங்களூர் மற்றும் சேலம் இடையிலான தனியார் ஆம்னி ஒன்று பெங்களூரில் இருந்து சேலம் செனறு கொண்டு இருந்தது

ஆம்னி பேருந்து ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் சாலைத் தடுப்பில் மோதி தனியார் ஆம்னி பேருந்து விபத்திற்கு உள்ளானது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூர் மற்றும் சேலம் இடையிலான படுக்கை வசதிகளை கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில், பெங்களூரில் இருந்து சேலத்திற்கு தனியார் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத நிலையில் ஆம்னி பேருந்து தொப்பூர் டோல்கேட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடியது. இதனை அறிந்த பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

driver - 2026

இதற்கிடையில், இந்த தனியார் ஆம்னி பேருந்துக்கு பின்னால் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அவர்கள் சாலைக்கும் சாலையோரத்துக்குமாக தாறுமாறாக ஓடிய பேருந்தை கண்ட காரில் இருந்தவர்கள்

இந்த காட்சியினை செல்போனில் படம் பிடித்துள்ளனர். பிறகு அவர்கள் ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினர். இதனை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாத பேருந்து ஓட்டுனரோ காதில் விழாததுப் போல் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.

amni 1 - 2026

இது மட்டுமின்றி, ஓட்டுனர் அவருக்கு முன்னால் சென்ற மற்றொரு தனியர் ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். இந்த நிலையில் தான், ஆம்னி பேருந்து சாலையின் குறுக்கே இரும்பு பேரிகார்டை தட்டிக் கொண்டு தடுப்பில் மோதி பேருந்து விபத்திற்கு உள்ளானது.

இரவு நேரம் என்பதால், பேருந்தில் இருந்த பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு (emergency exit) முன்பக்க கண்ணாடி வழியாக வெளியேவந்தனர். அங்கு இருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஓட்டுனரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.

இந்த விபத்தை குறித்து விசாரணை செய்த அதிகாரிகள், ஓட்டுனர் குடி போதையின் காரணமாக தான் ஆம்னி பேருந்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.