840 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தை; பட்ஜெட் எதிர்வினை!

Published:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் சரிந்து 35,067 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 10,760 இல் வணிகம் நிறைவு பெற்றது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று சமர்ப்பித்த 2018-19ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினைத் தொடர்ந்து நேற்று இறங்கி ஏறிய பங்குச் சந்தை பின்னர் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்தது.

எல்டிசிஜி எனப்படும் நீண்ட கால முதலீட்டு லாபத்துக்கான வரியில் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட லாபத்துக்கு 10 சத வரி விதிக்கும் முடிவினை அடுத்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img