சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 81 – வது பட்டமளிப்பு விழா இம்மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது.
தமிழக அரசு நிர்வாகப் பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முறையாக நடைபெறும் இவ் விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் துணைவேந்தர் டாக்டர் .மணியன் Uதிவாளர் டாக்டர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த உள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் 17-ந் தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழக கவர்னர் 17-ந் தேதி மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொள்கிறார்.



