இவருக்கு… ஜெகன் அளித்த ஸ்பெஷல் ப்ளேஸ்மெண்ட் என்ன தெரியுமா?!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
swapna svbc channel - 2026

ஒய்எஸ்ஆர் கட்சியின் தெலுங்கு டிவி சேனல் ‘சாக்ஷி’யின் முன்னாள் தொகுப்பாளினி மற்றும் திரைப்பட இயக்குனர் சீனிவாச ரெட்டி இருவருக்கும் ஜெகன் முக்கிய பதவிகளை அளித்து உள்ளார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் அரசியல் மறுவாழ்வு இல்லமாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு வெளிவந்தாலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சி அவற்றைப் புறக்கணித்து விட்டு முன்னுக்குச் செல்லுகிறது. புதியதாக (எஸ்விபிசி) ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மேலும் இருவருக்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.

எஸ்விபிசி போர்டின் டைரக்டர்களாக டிவி ஆங்கர் ஸ்வப்னா, டைரக்டர் சீனிவாச ரெட்டி இருவரையும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. எஸ்விபிசி சேர்மனாக நகைச்சுவை நடிகர் பிருத்விராஜ்பாலிரெட்டியை ஏற்கெனவே நியமித்தது அனைவரும் அறிந்ததே. அவரோடு சேர்ந்து இந்த டைரக்டர்கள் இருவரும் பணியாற்ற உள்ளார்கள்.

உண்மையில் எஸ்விபிசி போர்டின் சேர்மனோடு ஒன்று சேர்ந்து டிடிடி நிர்வாக மண்டலி உறுப்பினர்களை டைரக்டர்களாக நியமிப்பது வழக்கம். ஆனால் அரசாங்கம் இந்த முறை அந்த சம்பிரதாயத்தில் இருந்து விலகி புதிதாக இருவருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

Balireddy Prudhviraj jagan - 2026

டிவி ஆங்கர் ஸ்வப்னா முன்பு தூர்தர்ஷன், டிவி9 சேனல்களில் பணியாற்றி தனக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். டிவி9 ல் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின் சாக்ஷி சேனலில் சேர்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின் அதில் இருந்து வெளியேறினாலும் சாக்ஷி டிவிக்கு கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். தற்போது டிவி10 சேனலில் பணியாற்றும் ஸ்வப்னா சொந்தமாக ஒரு வெப் சேனலை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஜகன் மீது தன் பணிவை பறைசாற்றிய வண்ணம் உள்ளார்.

அன்றைய தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு தன் இன்டர்வியூக்கள் மூலம் சிக்கல்கள் உண்டாக்கி, ஜகன் கட்சிக்கு அனுகூலமாக நடந்துகொண்டார். தேர்தலின் போது ஜெகனுக்கு அணில் போல் உதவி செய்து ஜெகன் பதவிக்கு வர உழைத்தார்.

தன்மீது அணில் போல் பக்தியை நிரூபித்த ஸ்வப்னாவுக்கு எஸ்விபிசி யில் டைரக்டர் பதவியை ஒப்படைத்து ஜெகன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்ற பேச்சு அடிபடுகிறது. சாக்ஷி டிவியில் வேலை பார்த்த பலருக்கும் நாமினேடட் பதவிகள் கொடுத்துள்ளார் என்றும் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் அரசு கஜானாவில் இருந்து லட்சக்கணக்கில் கொள்ளையடித்துக் கொடுக்கிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குமுறுகின்றன.

ஆயினும் ஜகன் அவற்றைக் கண்டு கொள்ளாமல் தன்னை நம்பியவர்களுக்கு தான் நினைத்த வண்ணம் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.