பாஜக., மற்றும் மோடியை எதிர்த்து… தவறு செய்து விட்டேன்: புலம்பும் சந்திரபாபு நாயுடு!

Published:

modi chandrababu - 2026

பிஜேபியோடு கூட்டணி வைக்காததால் தெலுங்கு தேசம் கட்சி தோற்றுவிட்டது என்பது சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிந்துவிட்டது! அண்மையில் விசாகப்பட்டினத்தில் பயணம் மேற்கொண்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சில சுவையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசை பகைத்துக் கொண்டதால், தாம் மிகவும் நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் தேவையற்ற விதத்தில் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் இத்தனை தொல்லைகள் இருந்திருக்காது என்றார் .

மத்திய அரசை எதிர்த்ததால் மாநிலத்திற்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரிய நஷ்டம் விளைந்துவிட்டது… என்றார் சந்திரபாபு நாயுடு. புதிதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ள இந்தக் கருத்துகள் தெலுங்கு மாநிலங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன.

இத்தனை நாட்களாக சந்திரபாபு நாயுடு எங்கே சென்றாலும் தன் கட்சியின் தோல்விக்கு காரணம் விளங்கவில்லை என்று புலம்பி வந்தார். ஆனால் இப்போது அவர் கூறியுள்ள கருத்துக்களைப் பார்க்கையில் பிஜேபியோடு கூட்டணி அமைக்காததால் தான் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தது என்ற விஷயம் சந்திரபாபு நாயுடுவுக்கு விளங்கி விட்டதா? அல்லது மீண்டும் பிஜேபி கூட்டணியில் சேர்வதற்காக பாபு முயற்சிக்கிறாரா? என்ற ஐயங்கள் தெலுங்கு மாநிலங்களில் சர்ச்சையாக வெளிப்பட்டு வருகிறன்றன.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் ஏற்கெனவே பிஜேபியில் சேர்ந்துள்ள நிலையில் மற்றும் சிலரும் பிஜேபியில் செய்வதற்கான வழிவகைகளை தேடி வருகிறார்கள். இந்தச் சூழலில் மீண்டும் சந்திரபாபு நாயுடு தாமரைக் குடும்பத்தை நெருங்கிச் செல்லும் பிரயத்தனத்தில் இருப்பது தெரிகிறது. அதனால் சில தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இன்றோ நாளையோ நாயுடு பிஜேபியோடு கைகோர்க்கப் போகையில்… எந்த கட்சியில் இருந்தால் என்ன? எதற்காக இப்போது கட்சி மாற வேண்டும் என்று அமைதி காத்து வருவதாகத் தெரிகிறது. மீதி உள்ளவர்களையாவது கட்சி மாறாமல் பாதுகாக்கும் எண்ணத்தில்தான் நாயுடு இவ்வாறு வியூகம் வகுக்கறாரோ என்ற விவாதமும் நடந்து வருகிறது.

மொத்தத்தில் சந்திரபாபு நாயுடு தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டாரா ? அல்லது அவருக்கு ஞானோதயம் வந்து விட்டதா ? என்பது சரியாகப் புரியாவிட்டாலும் அவர் பிஜேபிக்கு மறைமுகமாக சிக்னல் அளித்துள்ள விஷயம் மட்டும் நன்றாக புரிகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img