December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

புனே டெஸ்டில் இந்தியா அபாரம்: இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் வென்று தொடரைக் கைப்பற்றியது!

pune test ind - 2025

புனேயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்திய, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, புனேயில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழந்து, 601 ரன் எடுத்து, டிக்ளேர் செய்தது.

அதைத் தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி, 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணியை விட 326 ரன் பின்தங்கியதால், பாலோ-ஆன் பெற்று, தொடர்ந்து விளையாடியது தென்ஆப்பிரிக்க அணி.

இரண்டாவது இன்னிங்க்ஸிலும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இறுதியில், தென்ஆப்பிரிக்க அணி, 189 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மேலும் ஒரு சாதனை படைத்தது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று சாதித்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

pune testind - 2025

2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது

இந்தப் போட்டியில் இன்னொரு சாதனையாக, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

pune test ind aswin - 2025

புனே டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 69 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை எடுத்தார் அஸ்வின். இதன் மூலம், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்திய வீரர் ஆனார் அஸ்வின். கும்ப்ளே (84 விக்கெட்), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன்சிங் (60) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

மேலும், அஸ்வின் 9 டெஸ்டில் இந்த விக்கெட்டை எடுத்தார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட் வீழ்த்திய 5-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். பர்னஸ் (ஆஸ்திரேலியா) 5 டெஸ்டிலும், முரளீதரன் (இலங்கை) 7 டெஸ்டிலும், ஒயிட்டி மற்றும் கிரீம்மெட் (ஆஸ்திரேலியா) தலா 8 டெஸ்டிலும் அந்நாட்டுக்கு எதிராக அதிவேகத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories