காஷ்மீரில் மீண்டும்… மினி பஸ், ரயில் சேவைகள்: நெரிசலில் சிக்கிய ஸ்ரீநகர்!

Published:

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று முதல் ‘மினி’ பஸ்கள் இயங்கத் தொடங்கின. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாத பஸ் போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது.

ஸ்ரீநகர் – பாராமுல்லா வழித்தடங்களில் இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதையடுத்து, நேற்று இரண்டு முறை, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கார்கள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்து, வழக்கம் போல இயங்கத் தொடங்கின. ஸ்ரீநகரின் பல பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று முதல் மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை தொடங்குகிறது.

காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி விலக்கிக் கொள்ளப் பட்டதில் இருந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img