தந்தையின் கவனக்குறைவு! மகளுக்கு ஏற்பட்ட விபரிதம்! வைரல் வீடியோ!

Published:

bike baby - 2026

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிப்ரி பஜாரில் ஓட்டல் ஒன்றின் வெளியே ஒரு சிறுமியும், அவரது தந்தையும் பைக்கில் நின்று கொண்டிருந்துள்ளனர். சிறுமியை பைக்கில் அமர வைத்தபடி, அவரது தந்தை நின்றுள்ளார். பைக்கின் பின்புறம் ஒருவர் அமர்ந்துள்ளார்.

ஆனால், பைக் சாவியை எடுக்க மறந்துவிட்டதால், அந்த சிறுமி திடீரென விளையாட்டாக, பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே இருந்த ஓட்டலில் பாய்ந்து சென்று அடுப்பு, மேஜைகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி கீழே விழுந்தது.

இதுதவிர அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாத்திரம் சிறுமியின் மேலே கவிழ, கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டு. வலியில் துடித்த சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Related articles

Recent articles

spot_img